நமது நாட்டின் திறமை மற்றும் தொழில்நுட்பத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது – பிரதமர் மோடி
- June 2, 2020
- jananesan
- : 1137
- Narendramodi |
பிரதமர் நரேந்திர மோடி, இன்று இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (சிஐஐ) வருடாந்திர கூட்டத்தில் பேசினார்.கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சிஐஐ ஆண்டு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆன்லைன் மூலம் உரையாற்றினார்.
Addressing the #CIIAnnualSession2020. https://t.co/mdsgKAc8IU
— Narendra Modi (@narendramodi) June 2, 2020
சிஐஐ ஆண்டுக் கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங்கில் பிரதமர் மோடி பேசியதாவது:
கொரோனா பாதிப்பால் இதுபோன்ற ஆன்லைன் நிகழ்ச்சிகள் புதிய முயற்சியாக இருக்கிறது.” கொரோனா வைரஸை எதிர்த்து போராட நாம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும்.
*விவசாயம், சுயதொழில் செய்வோர், தொழில் முனைவோர், தொழில்நுட்பத்தால் பொருளாதாரம் விரைவில் மீளும்.கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் இந்தியா சென்று கொண்டிருக்கிறது.
*விவசாயப் பொருட்களை மின்னணு வர்த்தகம் மூலமாகவும் விற்பனை செய்யலாம். ஏழை, எளிய மக்களுக்கு மத்திய அரசின் நலத்திட்டங்கள் பெரும் உதவிகரமாக இருக்கின்றன.விவசாயிகளின் நலனுக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது
*இந்தியாவை தற்சார்புடையதாக மாற்ற ஊக்கம், கண்டுபிடிப்பு, முதலீடு, ஒருங்கிணைத்தல் மற்றும் உட்கட்டமைப்பு ஆகிய 5 விஷயங்கள் தேவை.ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கும்
*‘வளர்ச்சியைப் பெறுவோம்’ என்று சொல்வதை விட, ‘கண்டிப்பாக நாம் வளர்ச்சியைப் பெற்றுவிடுவோம்’ என்று சொல்ல விழைகிறேன்.நாம் இழந்த பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்போம்
*கொரோனாஅச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில்செல்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவும் வகையில் திட்டங்கள்வகுக்கப்பட்டுள்ளன.
* ஏழை எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் பெரும் உதவிக்கரமாக உள்ளது. ஏழை எளிய மக்களுக்கு 53 ஆயிரம் கோடி அளவுக்கு நிவாரண திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
* #Unlock1 மூலம் பொருளாதாரத்தின் முக்கிய பகுதிகளை நாம் திறந்துள்ளோம். நமது நாட்டின் திறமை மற்றும் தொழில்நுட்பத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது
*கொரோனாவுக்கு எதிராக பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசு முன்னுரிமை அளித்துள்ளது. இதற்காக அரசு உடனடியாக முடிவெடுத்தது.தொழிலதிபர்களின் திறமையால் இந்தியா, மீண்டும் முழு வளர்ச்சி பெறும்
*வைரசை எதிர்த்து போராட நாம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியிருக்கும்.எங்களைப் பொறுத்தவரை சீர்திருத்தங்கள் என்றால், தைரியமான முடிவுகளை எடுப்பது மற்றும் உரிய காலத்தில் அவை நிறைவேற்றப்படுவதும் ஆகும்.
*முதலீடு மற்றும் வர்த்தகத்திற்குத் தொடர்ச்சியாக நாங்கள் உகந்த சூழலை உருவாக்கப் பணி செய்து வருகிறோம்.
*நாட்டில் உள்ள பல லட்ச சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்தான் பொருளாதார வளர்ச்சியின் மையம். இவ்வாறு பிரதமர் பேசினார்.
Leave your comments here...