விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றி பார்க்க எம்.எல்.தாமிரபரணி என்ற புதிய சொகுசு படகு வந்தாச்சு..!!

தமிழகம்

விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றி பார்க்க எம்.எல்.தாமிரபரணி என்ற புதிய சொகுசு படகு வந்தாச்சு..!!

விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றி பார்க்க எம்.எல்.தாமிரபரணி என்ற புதிய சொகுசு படகு வந்தாச்சு..!!

கன்னியாகுமரியில் கடலின் நடுவே பாறைகளில் அமைந்துள்ள விவேகானந்தா நினைவு மண்டபம் மற்றும் 133 அடிஉயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகள் நேரில் சென்று பார்வையிட வசதியாக தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் எம்.எல். பொதிகை, எம்.எல். குகன், எம்.எல். விவேகானந்தா ஆகிய மூன்று படகுகள் இயக்கி வருகிறது. சீசன் இல்லாத காலங்களில் பயணிகள் நெரிசல் இன்றி இவைகளை பார்வைட்டு வருகின்றனர். ஆனால் கோடைசுற்றுலா சீசன் காலங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் வெயிலில் நீண்டநேரம் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது.

டெல்டா பாலைவனமாகும்: சாயக்கழிவு ஆலை பணிகளை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை..!


இதையடுத்து பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக நிர்வாகம் தற்போது பயன்பாட்டில் இருக்கும் மூன்று படகுகள் போக மேலும் கூடுதலாக எம்.எல். தாமிபரணி, எம்.எல். திருவள்ளுவர் என்ற பெயரில் இரண்டு சொகுசுப் படகுகள் வாங்க சுமார் ரூ. 8.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து கோவாவில் உள்ள தனியார் படகுகட்டுமான நிறுவனம் சார்பில் படகுகட்டும் பணி நடைபெற்று வந்த நிலையில், எம்.எல். தாமிரபரணி படகு முழுமை பெற்றுள்ளது. இப்படகு சனிக்கிழமை கன்னியாகுமரி பூம்புகார் படகுதளத்தை அடைந்தது.

இதனை கோட்டாட்சியர் மயில் ஆய்வு செய்தார். இதுதொடர்பாக பேசிய பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், கடலின் நடுவே அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் மண்டபத்திற்கும், திருவள்ளுவர் சிலைக்கும் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும் பணியில் தற்போது மூன்று படகுகள் ஈடுபட்டு வருகின்றன.சீசன் நேரங்களில் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் நலன் கருதி புதிதாக இரண்டு படகுகள் வாங்க முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதன் பணிகள் முடிக்கப்பட்டு எம்.எல்.தாமிரபரணி சொகுசு படகு இங்கு வந்துள்ளது. மேலும் எம்.எல்.திருவள்ளுவர் என்ற படகின் 90 சதவீத பணிகள் நிறைவடைந்து விரைவில் கன்னியாகுமரி வரவுள்ளது. இந்தப் படகு சுமார் 26 மீட்டர் நீளமும், 8 மீட்டர் அகலமும் கொண்டது. ஒரே நேரத்தில் 75 பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட வசதி செய்யப்பட்டுள்ள இந்தப் படகு கொரோனா ஊடங்கு முடிந்தபிறகு ஆட்சியரின் ஒப்புதல் பெற்ற பின் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு விடப்படும் என்றார்.

Leave your comments here...