பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சயீத் அப்ரிடி : ட்விட்டரில் வைச்சி செய்த கவுதம் கம்பீர், யுவராஜ் சிங்..!

உலகம்

பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சயீத் அப்ரிடி : ட்விட்டரில் வைச்சி செய்த கவுதம் கம்பீர், யுவராஜ் சிங்..!

பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சயீத் அப்ரிடி  : ட்விட்டரில் வைச்சி செய்த கவுதம் கம்பீர், யுவராஜ் சிங்..!

பாகிஸ்தான் முன்னாள் வீரர் சயீத் அப்ரிடி எப்போதுமே இந்தியாவுக்கு எதிராகவும் காஷ்மீர் குறித்தும் சர்ச்சை கருத்துகளை பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.ஆனால் இந்த முறை சற்று அதிகப்பிரசங்கித்தனமாக பிரதமர் மோடி குறித்து பேசியதால் கிரிக்கெட் வீரர்கள் பலரும் சயீத் அப்ரிடி எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிக்குச் சமீபத்தில் சென்ற ஷாகித் அப்ரிடி உலகமே கொரோனா எனும் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது, இதை விட மோசமானது மோடியின் மனமும் இதயமும். காஷ்மீரில் 7 லட்சம் ராணுவத்தினரை குவித்துள்ளார் என சயீத் அப்ரிடி கூறினார்

இதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரரும் எம்.பியுமான காம்பீர் , யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் அஃப்ரிடிக்கு பதிலடி கொடுத்துள்ளார்

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கதில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் , எம்பி-யுமான கவுதம் கம்பீர் : சிலருக்கு வயதுதான் ஆகிறதே தவிர மனத்தளவில் வளர்ச்சி ஏற்படுவதில்லை. சாகித் அஃபிரிடி இப்போதுதான் 16 வயது நபர் போல் பேசுகிறார்.

உலகமே கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கும்போது காஷ்மீர் பற்றி பேசுகிறார் பிரதமர் மோடியைப் பற்றி அவதூறாகப் பேசுகிறார், இது உங்களுடைய உங்கள் நாட்டுடைய எண்ணங்களை வெளிப்படுத்துகிறது. இது துரதிர்ஷ்டமானது.


பாகிஸ்தானில் ஒருவர் மீது வெளிச்சம் விழ வேண்டுமென்றால் இந்தியாவையும் பிரதமரையும் திட்டினால் போதும். ஏழைகளுக்கு உணவு கொடுக்கச் சென்று விட்டு இப்படிப் பேசலாமா? உங்கள் நாட்டு நிலையை பாருங்கள், அங்கு பணம் இல்லை மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் அரசியல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.கொரோனா காலத்திலும் எல்லை வழியாக பயங்கரவாதிகளை அனுப்புகிறீர்கள். கொரோனா காலத்திலும் உங்கள் நாடு எல்லை தாண்டிய பயங்கரவாதம் செய்து வருகிறது.
பாகிஸ்தானில் உள்ள இம்ரானும், ராணுவ தளபதி பஜ்வாவும், ஷாஹீத் அப்ரிதியும் சரியான ஜோக்கர்கள் என்றும் அவர்கள் நரேந்திர மோடியை குறை கூறியே பாகிஸ்தான் மக்களை ஏமாற்றுகிறார்கள். கிரிக்கெட்டில் கூட உங்களை யாரும் சீரியசாகப் பேசுவதில்லை, இப்போது இப்படியெல்லாம் பேசிக்கொண்டிருந்தால் உங்களை யாரும் மதிக்கப்போவதில்லை என்று அப்ரிடிக்கு கடுமையாகப் பதிலடி கொடுத்தார்.


இதனையடுத்து யுவராஜ் சிங், மோடிக்கு எதிரான அப்ரிடியின் கருத்தை ஏற்க முடியாது. மனித நேய அடிப்படையில்தான் அவரது முயற்சிக்கு உதவச்சொன்னேன் இனி ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம் என்று ட்விட் செய்தார். இதனை மறுட்வீட் செய்த ஹர்பஜன் சிங் ஆம் இனி ஒருபோதும் இவருக்கு ஆதரவு கிடையாது என்று ட்விட் செய்துள்ளார்.

Leave your comments here...