‘பாஸ்டேக்’ இல்லாமல் அதற்காக ஒதுக்கப்பட்ட வழிகளில் பயணிக்கும் வாகனங்களிடம் இரண்டு மடங்கு கட்டணம்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

இந்தியா

‘பாஸ்டேக்’ இல்லாமல் அதற்காக ஒதுக்கப்பட்ட வழிகளில் பயணிக்கும் வாகனங்களிடம் இரண்டு மடங்கு கட்டணம்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

‘பாஸ்டேக்’ இல்லாமல் அதற்காக ஒதுக்கப்பட்ட வழிகளில் பயணிக்கும் வாகனங்களிடம் இரண்டு மடங்கு கட்டணம்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. இதன்படி, பாஸ்டேக் வேலை செய்யாவிட்டால் அல்லது செல்லத்தக்கதாக இல்லாவிட்டால் சுங்கச்சாவடிகளில் அந்த வாகனங்களிடம் இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படும் என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க, பாஸ்டேக் கட்டண முறை அறிமுகம் செய்யப்பட்டது. பாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்த தனி வழி உள்ளது. பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு கட்டணம் ரொக்கமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், பாஸ்டேக் கட்டாயம் ஆக்கப்பட்ட பிறகு, பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படும் என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. ஊரடங்கு காரணமாக சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது; மீண்டும் கட்டண வசூலிப்பு ஏப். 20ம் தேதி துவங்கியது. பாஸ்டேக் வழிகளில் மற்ற வாகனங்களும் பயணித்து வருகின்றன. இதனால் பாஸ்டேக் வைத்துள்ளவர்கள் தேவையின்றி காத்திருப்பதால் அவர்களின் நேரம் விரையமாகிறது.எனவே பாஸ்டேக் இல்லாமல் அதற்கான வழிகளில் பயணிக்கும் வாகனங்களிடம் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இந்த நடைமுறையை இன்று முதல் நடைமுறைப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Leave your comments here...