வலிமையான இந்தியாவை உருவாக்க இதுவே தருணம் ; 4ஆம் கட்ம ஊரடங்கு நீடிப்பா..? பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சம் என்ன..?

இந்தியா

வலிமையான இந்தியாவை உருவாக்க இதுவே தருணம் ; 4ஆம் கட்ம ஊரடங்கு நீடிப்பா..? பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சம் என்ன..?

வலிமையான இந்தியாவை உருவாக்க இதுவே தருணம் ; 4ஆம் கட்ம ஊரடங்கு நீடிப்பா..?  பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சம் என்ன..?

உலகை உறைய வைத்துள்ள கொரோனாவால் பல நாடுகளில் ஆயிரக்கணக்கான உயிர்ப்பலிகள் ஏற்பட்டு வருகின்றன. கொரோனாவை தடுக்க சமூக இடைவெளியும், ஊரடங்கும்தான் சாத்தியம் என மருத்துவ நிபுணர்கள் அறிவுரை வழங்கியதை அடுத்து இந்தியாவில் கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். முதலில் 21 நாட்கள் முழு அடைப்பை பின்பற்றினாலும் கொரோனா கட்டுக்குள் வரவில்லை.

இதனையடுத்து ஏப்.14 முதல் மீண்டும் ( மே.3 ம் தேதி) வரை 18 நாட்களுக்கும் ,மேற்கூறிய 2 அறிவிப்புகளையும் பிரதமர் மோடி அறிவித்தார். தொடர்ந்து மே 4 ம் தேதி முதல் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என மத்திய சுகாதார துறை அரசு அதிகாரிகள் அறிவித்தனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி (11 ம் தேதி ) மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விவாதித்தார்.

பிரதமர் மோடி நேற்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அந்த உரையில் அவர் கூறியதாவது:-

கொரோனாவுடன் போராடி உயிரிழப்புகளை தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் முன்னேறவும் வேண்டும். வலிமையான இந்தியாவை உருவாக்க இதுவே தருணம். நாம் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.


இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை உலக நாடுகள் கொள்முதல் செய்து வருகின்றன. மூலப்பொருள் மற்றும் உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவில் உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி உலகின் வளர்ச்சிக்கு வித்திடும்.

கொரோனா பாதிப்பு தொடங்கிய போது பிபிஇ எனப்படும் பாதுகாப்பு உபகரணம் ஒன்று கூட நம் நாட்டில் உற்பத்தி செய்யவில்லை.


என் 35 முகக்கவசம் மட்டுமே குறைவான எண்ணிக்கையில் நம்மிடம் இருப்பு இருந்தது. ஆனால் தற்போது தினமும் 2 லட்சம் பிபிஇ பாதுகாப்பு உபகரணங்களையும், 2 லட்சம் என் 35 ரக முகக்கவசங்களையும் நாம் தயாரிக்கிறோம்.

இந்தியாவின் வளர்ச்சி பொருளாதாரம், உள்கட்டமைப்பு, மனித வளம், உற்பத்தி தேவை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய 5 காரணிகளை கொண்டதாகும்.

கொரோனா மீட்பு நடவடிக்கைகளுக்காகவும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு பொருளாதார திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த பொருளாதார சிறப்புத்திட்டங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதம் ஆகும்.


இந்த சிறப்பு திட்டம் மூலம் ஏழை, எளிய நடுத்தர மக்கள் பயன் அடைவார்கள். உள்ளூர் உற்பத்தி, உள்ளூர் விற்பனை, உள்ளூர் விநியோகம் இவைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.

சிறு,குறு நிறுவனங்களுக்கு இந்த திட்டம் உதவும். 20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார திட்டங்கள் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்கும். இந்த சிறப்பு பொருளாதார வளர்ச்சி திட்டம் குறித்த விரிவான விவரங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரைவில் அறிவிப்பார்.

மேலும் ங4 ஆம் கட்ட ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். அந்த ஊரடங்கு தொடர்பான விவரங்கள் மே 18-ம் தேதிக்கு முன்னதாகவே அறிவிக்கப்படும்.மாநிலங்களின் பரிந்துரையின் அடிப்படையில் 4-ம் கட்ட ஊரடங்கு தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

Leave your comments here...