காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் : அஜித் தோவல் நடத்திய உயர்மட்ட கூட்டம்..!

இந்தியா

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் : அஜித் தோவல் நடத்திய உயர்மட்ட கூட்டம்..!

காஷ்மீரில் பயங்கரவாதிகள்  தொடர்  தாக்குதல் : அஜித் தோவல் நடத்திய உயர்மட்ட கூட்டம்..!

காஷ்மீரின் ஹேண்ட்வாரா, பாரமுல்லா மற்றும் சோப்பூர் ஆகிய பகுதிகளில் வலுவான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணியில் ஒரு கர்னல் அதிகாரி உட்பட ஆறு வீரர்களின் உயிர்களை இழந்த பின்னணியில் அஜித் தோவல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இடையிலான உயர் மட்ட கூட்டம் நேற்று கூட்டப்பட்டது.

காஷ்மீரில் நடக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள, தி ரெசிடென்ஷியல் பிரண்ட் உள்ளிட்ட காஷ்மீர் கிளர்ச்சி குழுக்களை பயன்படுத்தி தீவிரவாத தாக்குதலை பாகிஸ்தான் அரங்கேற்ற உள்ளதாக ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் மதிப்பீட்டைக் கேட்க மணிக்கணக்கில் செலவழித்த தோவல், பாகிஸ்தானால் ஏவப்பட்ட எந்த பயங்கரவாதியும் காஷ்மீருக்குள் வரக்கூடாது என்பதற்காக எதிர் ஊடுருவல் திட்டம் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று அவர்களிடம் கூறினார்.பாதுகாப்பு படைகள் ஏப்ரல் மாதத்தில் பல ஊடுருவல் முயற்சிகளைத் தடுத்தது. ஆனால் புலனாய்வு அமைப்புகளின் ஒரு மதிப்பீட்டின்படி, கிட்டத்தட்ட 25-30 பேர் அகப்படாமல் காஷ்மீருக்குள் புகுந்து விட்டனர் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஐந்து மணி நேரம் இந்த ஆலோசனை நடந்தது. அதில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து, அதில் பங்கேற்ற சிலர் கூறியதாவது:ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவரான, ரியாஸ் நைகூவைக் கொன்றதற்கு, படைப் பிரிவினருக்கு, அஜித் தோவல் பாராட்டு தெரிவித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மற்றவர்களை அதிகம் பேச வைத்து, அங்குள்ள நிலைமை குறித்து கேட்டறிந்தார்.’தற்போது கோடை துவங்கியுள்ளதால், எல்லையைத் தாண்டி நுழைவதற்கு, பாகிஸ்தான் பயங்கரவாதிகளும், அந்த நாட்டு ராணுவத்தினரும் அதிக முயற்சிகளை மேற்கொள்வர். ‘இந்த நிலையில், காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு படைப் பிரிவினர் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். ‘அனைத்துப் பிரிவுகளும் ஒருங்கிணைந்து, ஒருவரை ஒருவர் மதித்து செயல்பட வேண்டும்’ என அவர், அறிவுறுத்தினார்

Leave your comments here...