கொரோனா வைரஸ் தடுப்பு பணி : இதுவரையில் 3000ஆயிரம் மாஸ்க் தயாரித்து இலவசமாக வழங்கிய பெண் டெய்லர்..!

தமிழகம்

கொரோனா வைரஸ் தடுப்பு பணி : இதுவரையில் 3000ஆயிரம் மாஸ்க் தயாரித்து இலவசமாக வழங்கிய பெண் டெய்லர்..!

கொரோனா வைரஸ் தடுப்பு பணி : இதுவரையில்  3000ஆயிரம் மாஸ்க் தயாரித்து இலவசமாக வழங்கிய பெண் டெய்லர்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன. எனினும், பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்ப கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு தெரிவித்து வருகிறது.ட்டில் கொரோனா பாதிப்புக்கு 103 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 1,783ல் இருந்து 1,886 ஆக உயர்வடைந்து உள்ளது. 16 ஆயிரத்து 539 பேர் குணமடைந்தும், 37,916 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 52 ஆயிரத்து 952ல் இருந்து 56 ஆயிரத்து 342 ஆக உயர்வடைந்து உள்ளது.மேலும் பலர் போதிய பாதுகாப்பு முகக்கவசங்ககளே இல்லாமல் வெளியில் வருகிறார்கள்.

குமரிமாவட்டம் மேலகிருஷ்ணன்புதூர் பகுதியை சேர்ந்த ஶ்ரீதேவி என்ற பெண் டெய்லர் இவர் தினமும் 100க்கும் மேற்ப்பட்ட முகக்கவசங்களை தயாரித்து இலவசமாக வழங்கி வருகிறார்.

தனது வீட்டின் முன்பு சாலையில் செல்லும் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் வழங்கி வருகிறார்.தற்போது வரை 3000க்கும் மேலான முகக்கவசங்ககளை தயாரித்து இலவசமாக வழங்கியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்:- இந்த முகக்கவசத்தை அணிந்து வரும் நபர்களை பார்க்கும் போது தனக்கு மகிழ்ச்சி ஏற்ப்படுகிறது அது தன்னை மேலும் சொர்வு அடையாமல் இலவசமாக முகக்கவசம் தைத்து வழங்க ஊக்கமளிக்கிறது என்று மகிழ்ச்சியுயன் தெரிவித்துள்ளார்…

Leave your comments here...