வீரமரணமடைந்த செங்கோட்டை வீரர் சந்திரசேகரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்..!
- May 8, 2020
- jananesan
- : 1053
- CRPF | Kashmir
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் துணை ராணுவ படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது, அவர்களைக் கண்ட தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இருதரப்புக்கும் இடையே நடந்த சண்டையில் 3 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.வீர மரணம் அடைந்த ரிசர்வ் போலீஸ் வீரர்களில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள மூன்றுவாய்க்கால் பகுதியை சேர்ந்த சந்திர சேகரும் ஒருவர்.
முன்னதாக, குப்வாரா மாவட்டத்தின் ஹந்த்வாரா இடத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையின்போது ராணுவ மேஜர், கர்னல் உள்பட 5 பேர் வீர மரணம் அடைந்தனர்.
இந்நிலையில் வீரர் சந்திரசேகரின் உடல் நேற்று இரவு 7.15 மணிக்கு அவரது சொந்த ஊர் வந்தது. அங்கு உடலுக்கு மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன், அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் மரியாதை செய்தனர். அரசு மரியாதையுடன் இரவு 8.30 மணிக்கு உடல் அடக்கம் நடைபெற்றது.
முன்னதாக வீரர் சந்திரசேகரின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தென்காசி மாவட்டம் மேலூர் கிராமத்தை சேர்ந்த சந்திரசேகரின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கவும் உத்தரவிட்டு முதலமைச்சர், சந்தர சேகரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து இருந்தார்
Leave your comments here...