கோயில் நிதி ரூ.10 கோடியை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கும் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை..!!!

தமிழகம்

கோயில் நிதி ரூ.10 கோடியை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கும் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை..!!!

கோயில் நிதி ரூ.10 கோடியை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கும் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை..!!!

கொரோனா தடுப்பு பணிக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 கோடி நிதியுதவி வழங்குவதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 47 திருக்கோயில்களின் உபரி நிதியில் இருந்து முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 கோடி வழங்க வேண்டும் என்று, ஹிந்து சமய அறநிலைய துறை முதன்மைச் செயலர் பணீந்திர ரெட்டி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இதனிடையே, இந்த அறிவிப்புக்கு சமூக ஆர்வலர்கள், இந்து முன்னணி , இந்து மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, பாஜக தலைவர், பாஜக தேசிய செயலாளர் உட்பட பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

திருக்கோயிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள், கோயில் கடைநிலைப் பணியாளர்கள் பலர் பசி பட்டினி என்று அன்றாட வாழ்க்கைக்கே அவதிப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கு உதவாமல் இவ்வாறு அறநிலையத்துறை செய்வது தவறு என்று கருத்து தெரிவித்து இருந்தனர்.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சமுக ஆர்வலரும், ஆலய பாதுகாப்புக் குழு திரு.டிஆர்.ரமேஷ் அவர்கள் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இது தொடர்பாக அவர் முகநூலில் வெளியீட்டு உள்ள பதிவில்:-

இன்று மாண்பு மிகு சென்னை உயர் நீதி மன்ற – பொது நல வழக்கு அமர்வு முன்பாக – கோயில் பணம் ₹10 கோடி முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதை எதிர்த்து என் வழக்கு வந்தது.

விசாரித்த மாண்புமிகு நீதிபதிகள் வரும் வெள்ளிக்கிழமை வரை ஆணையர் தம் சுற்றறிக்கை மீதி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டு, அரசு நீதி மன்றம் முன்பாக தெரிவித்த படி 22.04.2020 தேதியிட்ட சுற்றறிக்கை திரும்பப் பெறப் படுகிறது என்று பிரமாணம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்திரவிட்டுள்ளது.

இளம் வழக்கறிஞர்கள் திரு நிரஞ்சன் ராஜகோபால், திரு அபினவ் பார்த்தசாரதி, திரு பிரஹலாத் பட் ஆகியோருக்கு மிக்க நன்றி.

ஹரி ஓம்
சிவ சிதம்பரம்


என பதிவு செய்து உள்ளார்.

மேலும் இது தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் : இந்து அறநிலையத்துறை ஆணையர் முதல்வர் நிவாரண நிதிக்கு 10 கோடி கோவில்கள் பணமாற்றம் செய்ய உத்தரவிட்டது அவரது அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது. டிரஸ்டிக்கள் இல்லாத சூழ்நிலையில் ஆணையர் உத்தரவு செல்லாது.எனவே உத்தரவை வாபஸ் பெற்று நீதிமன்றத்திற்கு தெரிவிக்க ஆணையருக்குஉயர் நீதிமன்றம் உத்தரவு


என கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக அறநிலையத்துறை முதன்மை செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள சுற்றிக்கை:- நிர்வாகக் காரணங்களினால் பார்வைக் குறிப்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை மறுபரிசீலனை செய்யப்பட்டதன் அடிப்படையில் இச்சுற்றறிக்கை திரும்பப் பெற்றுக்கொள்ளப்படுகிறது என கூறியுள்ளார்.

செய்தி:-
Krish HariKrishnan

Leave your comments here...