நகர்கோவில் காசி என்ற சுஜி டெமோவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசுக்கு அனுமதி..!!!

தமிழகம்

நகர்கோவில் காசி என்ற சுஜி டெமோவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசுக்கு அனுமதி..!!!

நகர்கோவில் காசி என்ற சுஜி டெமோவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசுக்கு அனுமதி..!!!

நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் காசி என்ற சுஜிடெமோ இவர், சமூக வலைதளம் மூலம் சென்னை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவரிடம் நெருங்கி பழகி, அவருடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் எடுத்தாராம் பின்னர் அவற்றை காட்டி மிரட்டி லட்சக்கணக்கில் பணம், நகைகளை பறித்துக்கொண்டார்.மேலும், பல பெண்களை மிரட்டி காசி பணம் பறித்து வருவது அந்தப் பெண் மருத்துவருக்கு தெரியவந்ததாம்.

இதையடுத்து, குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் காசி மீது அந்த மருத்துவர் புகார் அளித்தார் இதைத்தொடர்ந்து, காசி மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ததுடன், அவரை கைது செய்து நான்குனேரி சிறையில் அடைத்தனர். பின்னர், காசியின் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தி செல்லிடப்பேசி மற்றும் மடிக்கணினியை கைப்பற்றி சோதனை செய்ததில், அவருடன் ஏராளமான பெண்கள் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இருந்தனவாம். பெண் மருத்துவர் புகாரின் பேரில், நாகர்கோவிலை சேர்ந்த காசி,குண்டர் சட்டம் உள்பட 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளான்

இந்த நிலையில் கைதான இளைஞர் காசியின் பின்னால் மிகப்பெரிய கும்பல் செயல்பட்டு வருகிறது எனக்கூறி காசியை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதில் காசியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசுக்கு அனுமதி வழங்கி நாகர்கோவில் கூடுதல் மகளிர் நீதிமன்றம் உத்தரவு ஈட்டு உள்ளது
<
இந்நிலையில், மோசடி மன்னன் காசி மீது மேலும் ஒரு பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார். சமூக வலைதளத்தில் வீடியோ மூலம் குற்றச்சாட்டை பதிவு செய்த அந்த பெண், காசி கும்பலால் பாதிக்கப்பட்டவர்களுள் தானும் ஒருவர் எனக் கூறியுள்ளார். காசி தனி ஆளில்லை என்றும், அவன் பின்னணியில் மிகப்பெரிய கும்பல் செயல்படுவதாகவும் அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார். காசிக்கு உறுதுணையாக இருந்த அந்த கும்பலையும் காவல்துறை விட்டுவிடக் கூடாது என பாதிக்கப்பட்ட பெண் புகார் கூறியுள்ளார்.

Leave your comments here...