கொரோனா தடுப்பு பணி ; ஓய்வுபெற்ற மத்திய ஆயுதப்படை வீரர்கள் தேவை- தமிழக காவல்துறை..!

தமிழகம்

கொரோனா தடுப்பு பணி ; ஓய்வுபெற்ற மத்திய ஆயுதப்படை வீரர்கள் தேவை- தமிழக காவல்துறை..!

கொரோனா தடுப்பு பணி ; ஓய்வுபெற்ற மத்திய ஆயுதப்படை வீரர்கள் தேவை- தமிழக காவல்துறை..!

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த உத்தரவை மீறி தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவர்கள் சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.தமிழகம் முழுவதும், 3 லட்சத்து 55 ஆயிரத்து 603 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 லட்சத்து 36 ஆயிரத்து 426 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 லட்சத்து 01 ஆயிரத்து 111 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.3.47,33,599 அபராதம் வசூலிக்கப்பட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஓய்வுபெற்ற மத்திய ஆயுதப்படை வீரர்கள் தேவை என காவல்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் இணைந்து பணியாற்றிட மத்திய ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி ஓய்வுப்பெற்றவர்கள் தேவை.40 முதல் 50 வயது வரை விருப்பம் உள்ளோர் அவரவர் வசிக்கும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் அலுவலகங்களிலும், மாநகரங்களில் உள்ளோர் மாநகர ஆணையாளர் அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

Leave your comments here...