மக்களின் சுமையை குறைக்க மின் இணைப்பிற்கு 300 யூனிட் வரை மானியம் தரவேண்டும் ; இந்து மக்கள் கட்சி தமிழக அரசிற்கு கோரிக்கை..!!

தமிழகம்

மக்களின் சுமையை குறைக்க மின் இணைப்பிற்கு 300 யூனிட் வரை மானியம் தரவேண்டும் ; இந்து மக்கள் கட்சி தமிழக அரசிற்கு கோரிக்கை..!!

மக்களின் சுமையை  குறைக்க மின் இணைப்பிற்கு  300 யூனிட் வரை மானியம் தரவேண்டும் ; இந்து மக்கள் கட்சி தமிழக அரசிற்கு கோரிக்கை..!!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 36 நாட்கள் ஆகியுள்ள போதிலும், கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வந்தபாடில்லை. நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால், ஊரடங்கு மேலும், நீட்டிக்கப்படுமா ? அல்லது சில தளர்வுகள் இருக்குமா? என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு பொதுமக்கள் மீதும் கருணை காட்டி மின் இணைப்பிற்கு தலா 300 யூனிட் வரை மானியம் தந்து மின் கட்டணத்தை குறைத்து மக்களின் சுமையை குறைக்குமாறு இந்து மக்கள் கட்சி தமிழக அரசை வலியுறுத்தி உள்ளது

இது குறித்து இந்து மக்கள் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் பிரதீப்குமார்(கொக்கிகுமார்) வெளியிட்டுள்ள அறிக்கையில்:- தமிழகத்தை கொரோனா எனும் கொடிய வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து மீட்டெடுக்க மாண்புமிகு தமிழக முதல்வர் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முதலில் தலை வணங்குகிறோம்.

கொரோனா வைரஸின் தாக்கத்தால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பொது ஊரடங்கு நீடிப்பதால் பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாத சிக்கல் இருக்கிறது. ஆகவே மக்கள் வருமானத்திற்கு வழியின்றி அன்றாடம் உணவிற்கே திண்டாடுகின்றார்கள்.தமிழக அரசு பொது நிதியிலிருந்து குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் கொடுக்கிறது. அது இன்றைய விலைவாசிக்கு போதுமானதாக இல்லை இருப்பினும் இந்த நேரத்தில் அரசுக்கும் வருமானம் இல்லாத காரணத்தால் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்

இந்த இக்கட்டான காலத்திலும் இஸ்லாமியர்களின் ஜமாத்திற்கு ரமலான் கொண்டாட்டத்திற்காக 5145000 கிலோ முதல் ரக அரிசி இலவசமாக வழங்கியதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் தமிழக அரசு பொதுமக்கள் மீதும் கருணை காட்டி மின் இணைப்பிற்கு தலா 300 யூனிட் வரை மானியம் தந்து மின் கட்டணத்தை குறைத்து மக்களின் சுமையை குறைக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கோரிக்கையை வைக்கிறோம்

Leave your comments here...