அர்ச்சகர்களுக்கு 10ஆயிரம் பணியாளர்களுக்கு 5ஆயிரம் : தனது சொந்த செலவில் 50பேருக்கு வழங்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி – இணையத்தில் குவியும் பாராட்டு..!

சமூக நலன்தமிழகம்

அர்ச்சகர்களுக்கு 10ஆயிரம் பணியாளர்களுக்கு 5ஆயிரம் : தனது சொந்த செலவில் 50பேருக்கு வழங்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி – இணையத்தில் குவியும் பாராட்டு..!

அர்ச்சகர்களுக்கு 10ஆயிரம் பணியாளர்களுக்கு 5ஆயிரம் :  தனது சொந்த செலவில் 50பேருக்கு வழங்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி – இணையத்தில் குவியும் பாராட்டு..!

கொரோனா வைரஸின் வீரியம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுக்குள் கொண்டு வர நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளின்றி வெளியில் வரக்கூடாது என அறுவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், இந்த தடை உத்தரவை மீறி பொதுமக்கள் ஆங்காங்கே நடமாடி வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் பல்வேறு மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க சிரமப்பட்டு வருகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தனது சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள், ரேஷன் கார்டு இல்லாதவர்கள் என கண்டறியப்பட்ட 1000 பேருக்கு தேவையான பலசரக்கு பொருட்களை தனது சொந்த செலவில் வழங்க முடிவு செய்தார். அதன்படி அரிசி, புளி, பருப்பு, கொண்டைக்கடலை, எண்ணெய், மிளகு, கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம், சாம்பார்பொடி, மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகாய்தூள், பெருங்காயம், உப்பு உள்ளிட்ட பொருட்களை வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் வினியோகம் செய்ய வசதியாக கலெக்டரிடம் வழங்கினார்.


இதுபோல் தமிழகம் முழுவதும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ், 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அதில், பெரிய கோவில்களில் வேலை பார்க்கும், ஏறத்தாழ, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள், மற்றும் பணியாளர்களுக்கு, மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.சிறிய கோவில்களில் பணிபுரிபவர்களுக்கு, மாத ஊதியம் கிடையாது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாமல், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் கிராம பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. அவற்றை சார்ந்துள்ள அர்ச்சகர்கள், கோவில் திருவிழாக்கள், மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் வழங்கும் காணிக்கைகளை கொண்டு, தங்களது வாழ்வாதாரத்தை நிவர்த்தி செய்து கொள்கின்றனர்.தமிழக கோவில்களில், பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்கள், நாள் முழுவதும் திருவிழாக்கள் நடக்கும் காலமாகும். கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால், நோய் தடுப்பு நடவடிக்கையாக, கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.இதனால், பல ஆயிரக்கணக்கான பூசாரிகள், அர்ச்சகர்கள், வருவாய் இழந்து தவித்து வருகின்றனர்.


இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் , சிவகாசி இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு ரூபாய்10000 வீதமும் கோயில் பணியாளர்களுக்கு ரூபாய் 5000 வீதமும் மொத்தம் 50 நபர்களுக்கு ரூபாய் 2லட்சத்து80ஆயிரம் நிதி உதவியை தனது சொந்த செலவில் வழங்கியுள்ளார். தற்போது இது சமூக வலைதளங்கள், மற்றும் பொதுமக்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாராட்டி வருகிறார்கள்.

Leave your comments here...