எம்.பி.க்கள் ஊதியத்தில் 30% பிடித்தம் செய்ய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு –

இந்தியா

எம்.பி.க்கள் ஊதியத்தில் 30% பிடித்தம் செய்ய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு –

எம்.பி.க்கள் ஊதியத்தில் 30% பிடித்தம் செய்ய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு –

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில்,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கொரோனாவை எதிர்த்து செய்ய வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அவற்றுக்கு நிதி ஒதுக்குதல் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


பின்னர், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறியதாவது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அனைத்து மாநில கவர்னர்கள் ஏப்.,1ம் தேதி முதல் ஒரு ஆண்டிற்கு 30 சதவீதம் சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதற்கு அவர்கள் தாமாக முன்வந்து ஒப்புதல் அளித்துள்ளனர். பிரதமர், மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்களின் ஒராண்டு சம்பளமும் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. சம்பள குறைப்பால் சேமிக்கப்படும் நிதி கொரோனா நிவாரண நிதியில் சேர்க்கப்படும். ஓய்வூதியம் பெறும் முன்னாள் எம்.பி.க்களின் ஊதியத்தில் இருந்தும் 30% பிடித்தம் செய்யப்படும்.ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் நடைமுறை ஓராண்டுக்கு அமலில் இருக்கும்.


எம்பி.,க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடும் நிறுத்தி வைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.எம்.பி.,க்களுக்கு வழங்கப்படும் ரூ.10 கோடி நிதி அரசு நிதியில் சேர்க்கப்படும். இதன் மூலம் ரூ.7,900 கோடி சேமிக்கப்படும். இந்த பணம் அனைத்தும், நாட்டின் ஒருங்கிணைந்த நிதிக்கு செல்லும். இந்த நடைமுறை ஏப்ரல் 1ந்தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...