ஒவ்வொரு உயிரும் அரசுக்கு முக்கியம் அதனால்தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது – முதல்வர் பழனிசாமி பேட்டி

தமிழகம்

ஒவ்வொரு உயிரும் அரசுக்கு முக்கியம் அதனால்தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது – முதல்வர் பழனிசாமி பேட்டி

ஒவ்வொரு உயிரும் அரசுக்கு முக்கியம் அதனால்தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது – முதல்வர் பழனிசாமி பேட்டி

சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கலங்கரை விளக்கத்தில் உள்ள அம்மா உணவகத்திலும் முதல்வர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர், அங்கு சாப்பிட வந்திருந்தவர்களிடம் உணவின் தரம் குறித்து கேட்டுத் தெரிந்து கொண்டார்.

அம்மா உணவகத்தில் ஆய்வு செய்தப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி:- அம்மா உணவகத்தில் உரிய இருப்பு உள்ளதா என்பது குறித்தும், உணவின் தரம், சமையல் அறை சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு நடத்தினேன் என்றார். அம்மா உணவகத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தியதாக கூறினார்.அம்மா உணவகத்தில் உணவு தரமாகவும், சுவையாகவும் இருந்ததாக முதல்வர் பாராட்டு தெரிவித்தார். பல்வேறு மாநிலங்களில் பாராட்டப்பட்ட அம்மா உணவக திட்டம் இன்று மக்களுக்கு கைகொடுக்கிறது. அம்மா உணவகங்களில் மட்டும் தான் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி தரப்படுகிறது. ஓட்டல்களில் அதிகவிலைக்கு உணவு விற்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் விவரம் தெரியாததால் அரசுக்கு தாங்களாகவே தகவல் தெரிவிக்க கோரினோம். தாங்களாகவே முன் வந்து தகவல் அளித்தால் உரிய சிகிச்சை அளிக்கப்படும். இஎம்ஐ வசூல் என்பது மத்திய அரசின் விவகாரம் என்பதால், மத்திய நிதி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சையை தமிழக அரசு அளித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 124 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா அறிகுறி இருந்தால் ஈஷா கூட்டத்தில் பங்கேற்றவர்களையும் சோதனைக்கு உட்படுத்துவோம்.நோயின் தீவிரம் தெரியாமல் மக்கள் வெளியே நடமாடுகின்றனர். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் நோயின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஏப்ரல் 14-க்கு பிறகு என்ன என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்யும் என கூறினார்.

Leave your comments here...