டெல்லி தப்லிக் ஜமாத் மாநாடு : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை – தனிமைப்படுத்தப்பட்டது மேலப்பாளையம்

தமிழகம்

டெல்லி தப்லிக் ஜமாத் மாநாடு : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை – தனிமைப்படுத்தப்பட்டது மேலப்பாளையம்

டெல்லி தப்லிக் ஜமாத் மாநாடு : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை – தனிமைப்படுத்தப்பட்டது மேலப்பாளையம்

தமிழகத்தில் கொரோனா பரவமால் இருக்க, அதன் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தனிமைப்படுத்தி வருகின்றன. நெல்லை மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

டெல்லி மாநாட்டிற்கு சென்ற நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 22 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அனைவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா தடுப்பு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக, மேலப்பாளையம் பகுதியில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.மேலப்பாளையத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு சார்பில் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.


அதன்படி, மேலப்பாளையம் பகுதி எல்லை முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளது. அங்கிருப்பவர்கள் வெளியே செல்லவோ, வெளியாட்கள் அங்கு செல்லவும் அனுமதி இல்லை என்று காவல்துறை அறிவித்துள்ளது.அத்துடன், சுகாதாரப் பணியாளர்களை நோய் தடுப்பு பணிகளும், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 57 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ள நிலையில், தமிழக அரசுக்கு இந்த சூழல் மேலும் சவாலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...