கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் : தமிழக அரசுக்கு சக்தி மசாலா நிறுவனம் 5 கோடி ரூபாய் நிதியுதவி

சமூக நலன்தமிழகம்

கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் : தமிழக அரசுக்கு சக்தி மசாலா நிறுவனம் 5 கோடி ரூபாய் நிதியுதவி

கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் : தமிழக அரசுக்கு சக்தி மசாலா நிறுவனம் 5 கோடி ரூபாய் நிதியுதவி

கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் பால் சப்ளை, மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன. கடைகளை குறிப்பிட்ட நேரம் மட்டுமே திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. பஸ், ரெயில், விமான சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளன.கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் 192 நாடுகளுக்கு மேலாக பரவி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினைத் தடுக்க அரசு மேற்கொள்ளும் பணிகளுக்கு உதவும் வகையில், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார். இதையடுத்து பல்வேறு தொழில் நிறுவனங்கள், தனிநபர்கள் உள்ளிட்டோர் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வரின் வேண்டுகோளை ஏற்று, ஈரோடு சக்தி மசாலா நிறுவனம் ரூ.5 கோடியை முதல்வரின் பொது நிவாரண நிதியாக வழங்கியுள்ளது.இதன்படி சக்தி மசாலா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பி.சி.துரைசாமி, இயக்குநர் டி.சாந்தி ஆகியோர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்:-


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தாங்கள் எடுத்து வரும் சீரிய முயற்சிகளுக்கு சக்தி மசாலா நிறுவனங்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த முயற்சிகளுக்கு உதவும் பொருட்டு, எங்கள் சக்தி மசாலா நிறுவனத்தின் சார்பில், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி வழங்குகிறோம்.

இதற்கான காசோலையை இத்துடன் இணைத்துள்ளோம். கொரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணிகளில் நாங்களும் பங்கேற்க வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி’ எனத் தெரிவித்துள்ளனர்.

Leave your comments here...