பாரம்பரிய சித்த வைத்தியம் மூலம் கொரோனா வைரசை அழிக்க முடியும் – முன்னாள் மேயர் சைதை துரைசாமி தமிழக முதல்வருக்கு கடிதம்

சமூக நலன்தமிழகம்

பாரம்பரிய சித்த வைத்தியம் மூலம் கொரோனா வைரசை அழிக்க முடியும் – முன்னாள் மேயர் சைதை துரைசாமி தமிழக முதல்வருக்கு கடிதம்

பாரம்பரிய சித்த வைத்தியம் மூலம் கொரோனா வைரசை அழிக்க முடியும் – முன்னாள் மேயர் சைதை துரைசாமி தமிழக முதல்வருக்கு கடிதம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் வரும் ஏப்.,14 வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அத்யாவசிய பணிகள் தவிர மற்றவர்கள் வெளியே வரக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு, சுகாதாரத் துறை, காவல்துறை சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் நோயின் தீவிரம் தெரியாமல் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஆங்காங்கே சுற்றி வருகின்றனர். அப்படி தடையை மீறி வெளியே வருபவர்களை காவல்துறையினர் எச்சரித்தும், அறிவுரைகள் வழங்கியும் அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் பாரம்பரிய சித்த வைத்தியம் மூலம் கொரோனா வைரசை அழிக்க முடியும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் மேயர் சைதை துரைசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில் டெங்கு காய்ச்சல் பரவிய காலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, எடுத்த நடவடிக்கையை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். நில வேம்புக் குடிநீர், பப்பாளி இலைச்சாறு இரண்டையும் அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இலவசமாக வழங்க, ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசை அழிப்பதற்கும், தடுத்து நிறுத்துவதற்குமான மருந்து சித்த வைத்தியத்தில் நிச்சயம் உண்டு என்றும், மனிதகுலம் வாழ்வதற்கு வழி காட்டும் நல்வாய்ப்பை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி, வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்றும் சைதை துரைசாமி குறிப்பிட்டுள்ளார்.

Leave your comments here...