என்னை யாரும் கடத்தவில்லை – நான் எனது அம்மாவுடன் செல்லவிரும்புகிறேன் – நீதிபதி முன்பு இளமதி வாக்குமூலம்..!

தமிழகம்

என்னை யாரும் கடத்தவில்லை – நான் எனது அம்மாவுடன் செல்லவிரும்புகிறேன் – நீதிபதி முன்பு இளமதி வாக்குமூலம்..!

என்னை யாரும் கடத்தவில்லை – நான் எனது அம்மாவுடன் செல்லவிரும்புகிறேன் – நீதிபதி முன்பு இளமதி வாக்குமூலம்..!

ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த குரும்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த இளமதி, கவுந்தப்பாடியைச் சேர்ந்த செல்வன் ஆகியோர் 3 ஆண்டுகளாக காதலித்துவந்ததாக கூறப்படுகிறது. வேறு சாதி என்பதால், திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால், சில நாட்களுக்கு முன், சேலம் மாவட்டம் கொளத்தூரில், தி.வி.க. ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் அவர்கள் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இளமதியை அவரது பெற்றோர் கடத்திச் சென்றதாக கொளத்தூர் காவல் நிலையத்தில் செல்வன் புகார் அளித்தார். இந்நிலையில், கடந்த 14-ம் தேதி மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கறிஞருடன் இளமதி ஆஜரானார். பெற்றோருடன் செல்ல இளமதி விரும்புவதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

மேட்டூர் மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரான இளமதி, அன்று இரவு 9:00 மணியளவில், தாயார் சாந்தியுடன் அனுப்பி வைக்கப்பட்டார். அன்று இரவு பவானி காவல் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஈரோடு மாவட்டம் ஆர்.என்.புதூரில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார்.நேற்று காலை அங்கிருந்து, பவானி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு, கொளத்தூர் மணி உள்ளிட்ட 4 பேர் மீது பதியப்பட்ட வழக்கு தொடர்பாக, ஜே.எம்.எண் 1-வது நீதிமன்ற நடுவர் ஜீவ பாண்டியன் வீட்டில் இளமதி ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, தன்னை யாரும் கடத்தவில்லை, செல்வனை காதலித்து வந்த நிலையில், தாமாக விருப்பப்பட்டு திருமணம் செய்துகொண்டதாக இளமதி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சேலம் மாவட்டம் கொளத்தூர் காவல் நிலையத்தில் தனது மனைவியை கடத்தியதாக செல்வன் புகார் கொடுத்த வழக்கு தொடர்பாக இன்று காலை மேட்டூர் மகளிர் காவல் நிலையத்தில் இளமதி ஆஜராக உள்ளர்.

அதனைடுத்து சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு காவல் துறையினர் இளமதியை அழைத்துச் சென்று ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி முன்பு பேசிய அவர், ‘என்னை காவல்துறையினர் விசாரித்தனர். என்னை யாரும் கடத்தவில்லை. அம்மாவுடன் செல்ல விரும்புவதாக காவல்துறையிடம் கூறினேன். என்னுடைய வாக்குமூலத்தை காவல்துறையினரிடம் எழுத்துப் பூர்வமாக கொடுத்துள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Leave your comments here...