உத்திரப்பிரதேச யோகி ஆதித்யநாத் சாதனை – 3 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்த முதல் பாஜக முதல்வர்..!!

அரசியல்

உத்திரப்பிரதேச யோகி ஆதித்யநாத் சாதனை – 3 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்த முதல் பாஜக முதல்வர்..!!

உத்திரப்பிரதேச யோகி ஆதித்யநாத் சாதனை – 3 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்த முதல் பாஜக முதல்வர்..!!

உத்திரப்பிரதேச முதல்வராக 3 ஆண்டுகளை நிறைவு செய்த, முதல் முதல்வர் என்ற சாதனையை யோகி ஆதித்யநாத் பெற்றுள்ளார்.

உத்திரப்பிரதேசத்தில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், 403 இடங்களில் 312 இடங்களை பிடித்த பாஜக ஆட்சியை கைபற்றியது. யோகி ஆதித்யநாத் 2017, மார்ச் 19ல் உ.பியின் 21வது முதல்வராக பொறுப்பேற்றார். யோகி பொறுப்பேற்ற ஓராண்டில் நடந்த இடைத்தேர்தலில், பாஜக, கைவசம் இருந்த 3 தொகுதிகளில் பாஜக தோல்வியடைந்தது. தோல்வியிலிருந்து பாடம் கற்று கொண்டதாக யோகி தெரிவித்தார்.


பாஜகவின் யோகி ஆதித்யநாத் தனது தேர்தல் வாக்குறுதிகளில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீராக்க அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். முதலமைச்சராக பொறுப்பேற்ற போது உத்தரப்பிரதேசத்தில் குற்ற எண்ணிக்கையை குறைக்க போலீசாருக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்படும் என்றும், குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் சரண் அடைய வேண்டும் அல்லது மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என தெரிவித்திருந்தார். இவரது ஆட்சியில், சட்டம் – ஒழுங்கை பேணிக்காக்க கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பல குற்ற பின்னனி கொண்ட குற்றவாளிகள் என்கவுண்டர்கள் செய்யப்படனார். இதனால் சட்டம் ஒழுங்கு சீர் ஆனது.


கடந்த லோக்சபா தேர்தலில், உத்திரப்பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில், 62 தொகுதிகளை பாஜக கைபற்றி அசத்தியது. மேலும் வரும் 19ம் தேதி யோகி தனது 3 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்கிறார். இதற்கு முன் பாஜக முதல்வர்களாக இருந்த கல்யாண் சிங் (1991, ஜூன் 24 – 1992, டிச., 6 மற்றும் 1997 செப்., 21 – 1997, நவ., 12), ராம் பிரகாஷ் குப்தா (1999, நவ.,12 – 2000, அக்., 28) மற்றும் ராஜ்நாத் சிங் (2000, அக்., 28 – 2002, மார்ச் 8) ஆகியோர் முழுமையாக 3 ஆண்டுகளை முதல்வராக இருந்து நிறைவு செய்யவில்லை. இதனையடுத்து உத்திரப்பிரதேசத்தில் 3 ஆண்டுகளை நிறைவுசெய்த முதல் பாஜக முதல்வர் என்ற சாதனையை யோகி பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..!!

Leave your comments here...