“மக்களிடத்தில் பாஜகவின் கொள்கைகளை கொண்டு செல்வோம்”- பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள எல்.முருகன்…!

அரசியல்

“மக்களிடத்தில் பாஜகவின் கொள்கைகளை கொண்டு செல்வோம்”- பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள எல்.முருகன்…!

“மக்களிடத்தில் பாஜகவின் கொள்கைகளை கொண்டு செல்வோம்”- பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள எல்.முருகன்…!

தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு செப்.1-ம் தேதி தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் பாஜக தலைவராக யாரைத் தேர்வு செய்வது என்பதில் பெரும் குழப்பம் நீடித்து வந்தது. இதுதவிர மூத்த தலைவர்கள் சிலரின் பெயர்களும் அடிபட்டன. நிலையில், எல்.முருகனை நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார்.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராக பதவி வகித்து வரும் எல்.முருகன் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். சுமார் 15 வருடம் வழக்கறிஞர் பணியில் அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எல்.முருகன் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கணேசன், பொன்னார், ஹெச்.ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


அதன்பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பாஜக தலைவர் முருகன் பேசியதாவது:-
பாஜக மூத்த தலைவர்களின் ஆதரவோடு வழிகாட்டுதலோடு இந்த இடத்தில் அமர்ந்துள்ளேன். வரும் தேர்தலில் வெற்றிபெற்று பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இடம்பெறுவார்கள். அதை நோக்கியதாகவே எனது பயணம் இருக்கும்.

மேலும் மக்களிடத்தில் பாஜகவின் கொள்கைகளை கொண்டு செல்வோம்; தமிழக நலன், தமிழர்கள் நலனை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் . பாஜகவில் தற்போது இளைஞர்கள் மற்றும் படித்தவர்கள் அதிக அளவில் இணைந்து வருகிறார்கள். அவர்களோடு இணைந்து பணியாற்றுவதற்கு காத்திருக்கிறேன். நமது நாடு ஜனநாயக நாடு, இங்கு யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அவரவர்களுக்கு கொள்கை இருக்கும். எங்கள் கொள்கை மக்களை நோக்கிப் போக வேண்டும் என்பதே என்று கூறினார். சிஏஏ உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக நடைபெறும் தவறான பிரசாரங்களுக்குப் பதிலாக, வரும் 20-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 5-ஆம் தேதி வரை “உண்மையைச் சொல்வோம்; உரக்கச் சொல்வோம்’ என்னும் பரப்புரை பயணத்தை எல்லா கிராமங்களிலும் மேற்கொள்ள உள்ளோம் என கூறினார்.!

Leave your comments here...