கொரோனா வைரஸ் எதிரொலி: கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் 5-ம்வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை..!!

தமிழகம்

கொரோனா அச்சம் காரணமாக தமிழகத்தில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளுக்கு மார்ச் 16ம் தேதி முதல் மார்ச்.31ம் தேதி விடுமுறை என தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில்:- கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் முழுவதும் உள்ள எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளுக்கு வரும் 16-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்படுகிறது. கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள குமரி, கோவை, நெல்லை, தென்காசி, தேனி, நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் மட்டும் இந்த விடுமுறையானது 5-ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமாக அறிக்கை அளிக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...