அனாதையாக நிற்கும் வாகனங்கள் குறித்து தகவல் அளிக்கலாம்: புதிய செல்போன் செயலியை அறிமுகம் செய்தது சென்னை போலிஸ்…!!!

சமூக நலன்

சென்னையில் பல்வேறு சாலைகளில் யாரும் உரிமை கோராமல் கேட்பாரற்று நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் குறித்து தகவல் அளிக்க, செல்போன் செயலி ஒன்றை சென்னை காவல்துறையினர் அறிமுகம் செய்துள்ளனர். பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதில் சென்னை மாநகரின் பல்வேறு சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விலாசம் அறியாத வாகனங்கள் போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக இருந்து வருகின்ற நிலையில் பல்வேறு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து தகவல் தெரிவிக்க பொதுமக்களுக்கு ஒரு வாய்ப்பினை சென்னை காவல்துறை வழங்கியுள்ளது. மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் குறித்த தகவலை GCTP Citizen Services என்ற செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்யுமாறு சென்னை போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். காவல்துறையினருக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையில் அந்த வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்‌கப்பட்டுள்ளது. போலீசாரில் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Leave your comments here...