உள்நாட்டு முனையத்துக்கு காமராஜா் பெயா் சூட்டுங்கள்: டிடிவி தினகரன் கோரிக்கை..!!

தமிழகம்

உள்நாட்டு முனையத்துக்கு காமராஜா் பெயா் சூட்டுங்கள்: டிடிவி தினகரன் கோரிக்கை..!!

உள்நாட்டு முனையத்துக்கு காமராஜா் பெயா் சூட்டுங்கள்: டிடிவி தினகரன் கோரிக்கை..!!

புனரமைப்பு செய்யப்பட்டுள்ள சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்துக்கு முன்னாள் முதல்வா் காமராஜா் பெயா் சூட்ட வேண்டுமென அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் கோரிக்ககை விடுத்துள்ளாா்.


இது குறித்து அவர் கூறியுள்ள அறிக்கையில்:- சென்னை விமான நிலையத்தில் மறு நிர்மாணம் செய்யப்பட்டுள்ள உள்நாட்டு முனையத்திற்கு, ஏற்கனவே இருந்த பெருந்தலைவர் காமராஜரின் பெயரை மீண்டும் வைப்பதில் காட்டப்படும் தயக்கம் வருத்தமளிக்கிறது.


இதுதொடர்பாக இந்திய விமான நிலையங்களின் ஆணையம் ஏற்கனவே அளித்த வாக்குறுதிப்படி உள்நாட்டு முனையத்தின் பெயர்ப்பலகையில் உடனடியாக கர்மவீரர் காமராஜரின் பெயரை இடம் பெறச்செய்யவேண்டும். பெருமைக்குரிய பொதுவாழ்க்கையின் அடையாளமாக வாழ்ந்து மறைந்த காமராஜருக்கு அது மேலும் பெருமை சேர்ப்பதாக அமையும்.

மேலும் உள்நாட்டு விமானங்களுக்குள் செய்யப்படும் அறிவிப்புகளிலும் ‘காமராஜர் முனையம்’ என்கிற வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Leave your comments here...