அயோத்தி ராமர் கோவில்: கட்டுமான பணிக்காக ஐ.ஐ.டி இன்ஜினியர்களுடன் நிர்வாகிகள் ஆலோசனை..!!

இந்தியா

அயோத்தி ராமர் கோவில்: கட்டுமான பணிக்காக ஐ.ஐ.டி இன்ஜினியர்களுடன் நிர்வாகிகள் ஆலோசனை..!!

அயோத்தி ராமர் கோவில்: கட்டுமான பணிக்காக ஐ.ஐ.டி இன்ஜினியர்களுடன் நிர்வாகிகள் ஆலோசனை..!!

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கு, உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதையடுத்து, 67 ஏக்கர் பரப்பளவில், பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்படவுள்ளது. இதற்கான பணிகளை, ராம ஜென்மபூமி அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. கோவில் கட்டுமானப் பணிகள், வரும் ஏப்ரலில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, ராமர் கோவில் கட்டுமான பணிகளை மேற்பார்வையிட ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா டிரஸ்ட் என்ற அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்தது. இந்த அறக்கட்டளையின் கீழ், ராமர் கோவில் கட்டுமான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக பிரதமரின் முன்னாள் முதன்மை செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, கட்டுமானப் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசனை அளிக்கும்படி, டில்லி, கான்பூர் ஐ.ஐ.டியில் உள்ள பிரபல இன்ஜினியர்களிடம் அறக்கட்டளை நிர்வாகிகள் உதவி கோரியுள்ளனர். இந்த, ஐ.ஐ.டியைச் சேர்ந்த குறிப்பிட்ட சில இன்ஜினியர்கள் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு ஆலோசனை அளித்து வருகின்றனர். மேலும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது குறித்து, எல் அண்ட் டி நிறுவனத்திடமும் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்

Leave your comments here...