மாவட்ட செயலாளர்களை நாளை சந்திக்கிறார் ரஜினிகாந்த்..

அரசியல்

மாவட்ட செயலாளர்களை நாளை சந்திக்கிறார் ரஜினிகாந்த்..

மாவட்ட செயலாளர்களை நாளை சந்திக்கிறார் ரஜினிகாந்த்..

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நாளை மறுநாள் (5-ம் தேதி) காலை 10 மணிக்கு ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை ரஜினிகாந்த் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மாவட்டச்செயலாளர்கள் சந்திப்பில் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது தொடர்பான முக்கிய ஆலோசனை நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுடனான சந்திப்பின் போது நான் அரசியலுக்கு வருவது உறுதி, வரும் தமிழக சட்டபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...