அனுமதியின்றி செயல்பட்டு வந்ததாக திமுக பொருளாளர் துரைமுருகனுக்குச் சொந்தமான குடிநீர் ஆலைக்கு சீல்!

தமிழகம்

அனுமதியின்றி செயல்பட்டு வந்ததாக திமுக பொருளாளர் துரைமுருகனுக்குச் சொந்தமான குடிநீர் ஆலைக்கு சீல்!

அனுமதியின்றி செயல்பட்டு வந்ததாக திமுக பொருளாளர் துரைமுருகனுக்குச் சொந்தமான குடிநீர் ஆலைக்கு சீல்!

வேலூர்- காட்பாடி அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த திமுக பொருளாளர் துரைமுருனுக்கு சொந்தமான குடிநீர் ஆலையின் நீர உறிஞ்சும் பம்புக்கு திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது.

வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம் கூறுகையில்:- வேலூர் மாவட்டத்தில் 40 குடிநீர் ஆலைகள் உள்ளன. அதில், மூன்று ஆலைகள் மட்டுமே நிலத்தடி நீர் எடுக்க அனுமதி பெற்றுள்ளன. மீதமுள்ள 37 ஆலைகளும் மூடப்பட்டு வருகின்றன’ என்றார்.

இந்நிலையில் காட்பாடி அடுத்த உள்ளிபுதூர் கிரமாத்தில் முன்னாள் அமைச்சரும், திமுக பொருளாளருமான துரைமுருகனின் அருவி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆலை உள்ளது.இந்த ஆலை அனுமதியின்றி செயல்பட்டதாகக் கூறி பொதுப்பணித் துறையினர் மற்றும் காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன் முன்னிலையில் திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது.

திமுக பொருளாளருமான துரைமுருகனின் அருவி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆலை


இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் சென்னை உயர்நீதிமன்றம் ஆணைக்கு இணங்க அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி விற்பனை செய்து வந்த குடிநீர் ஆலைகளுக்கு தொடர்ந்து சீல் வைக்கப்படுகிறது. இந்தநிலையில் காட்பாடியில் உள்ள ஆலைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது என்றனர்.

Leave your comments here...