மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழா – சிறப்பு அழைப்பாளராக தெலுங்கனா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்பு

ஆன்மிகம்

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழா – சிறப்பு அழைப்பாளராக தெலுங்கனா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்பு

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழா – சிறப்பு அழைப்பாளராக தெலுங்கனா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்பு

பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைகாட்டில் உள்ள அருள்மிகு பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் மாசி கொடை விழா வெகு விமர்சியாக கொண்டாடபடுவது வழக்கம். இந்த விழா நாட்களில் லட்ச கணக்கான பக்தர்கள் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு தமிழகம் கேரளா உட்பட பல்வேறு பகுதிகளில் தரிசிக்க வருவார்கள். இந்த ஆண்டிற்கான மாசி கொடை விழா மார்ச் 1 தேதி இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது இதனால் அந்த பகுதி களை கட்டி காணப்படுகிறது. மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் விழாவில் பங்கேற்க கேரளாவில் இருந்து பக்தர்கள் அதிகமாக வருவது வழக்கம் இதனை முன்னிட்டு காலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷ பூஜை, சிறப்பு செண்டை மேளம் ஆகியவை நடந்தன. 7.50 மணியளவில் திருக்கொடியேற்றம் நடந்தது. இதில் தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர்.பெண்கள் பொங்கல் இட்டு வழிபாடு செய்தனர்.


அதைத்தொடர்ந்து சமய மாநாடு திடலில் இந்து சேவா சங்கம் சார்பில் 83வது சமய மாநாடு கொடியை தலைவர் கந்தப்பன் ஏற்றி வைத்தார். வெள்ளிமலை விவேகானந்த ஆசிரமம் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் மாநாடை திறந்து வைத்து பேருரை ஆற்றினார். சுவாமி கருணானந்தஜி மகராஜ், வள்ளலார் பேரவை சுவாமி பத்மேந்திரா ஆகியோர் ஆசியுரை வழங்கினர்.மேலும் திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மண்டைக்காடு மாசி திருவிழாவுக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.


இதில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், விஜயகுமார் எம்.பி., கலெக்டர் பிரசாந்த் ஏம்.வடநேரே, எஸ்.பி. ஸ்ரீநாத், திருக்கோயில்கள் இணை ஆணையர் அன்புமணி, கோயில் தந்திரி மகாதேவரு ஐயர், அறங்காவலர் குழு தலைவர் சிவகுற்றாலம், முன்னாள் பாஜக எம்எல்ஏ வேலாயுதம் , மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவணபாபு, கல்குளம் தாசில்தார் ராஜாசிங், பிரின்ஸ் எம்.எல்.ஏ., மாவட்ட பஞ். துணைத்தலைவர் சிவகுமார், தேவி கலா மன்றம், தேவி சேவா சங்கம் நிர்வாகிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Leave your comments here...