மாஸ் கட்டிய கன்னியாகுமரி மாவட்ட பாஜக – குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக 45ஆயிரம் பேர் திரண்ட பேரணி…!

தமிழகம்

மாஸ் கட்டிய கன்னியாகுமரி மாவட்ட பாஜக – குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக 45ஆயிரம் பேர் திரண்ட பேரணி…!

மாஸ் கட்டிய கன்னியாகுமரி மாவட்ட பாஜக – குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக 45ஆயிரம் பேர் திரண்ட பேரணி…!

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் இந்த சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் ஆதரவாக பேரணி, விளக்க பொதுக்கூட்டம் நடத்தி வருகிறது. இதேபோல் தான் தமிழகத்திலும் ஆதரவு, எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து வருகிறது. குமரி மாவட்ட பாஜக சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.பேரணியில் கலந்து கொண்ட பாஜக தொண்டர்கள் கையில் தேசிய கொடி ஏந்தியும், மோடி உருவம் கொண்ட முகமூடியை சிலரும் அணிந்திருந்தனர்


இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை வகித்தார். பார்வதிபுரத்தில் இருந்து பேரணி தொடங்கியது. இப்பேரணி கே.பி.ரோடு வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடைந்தது. பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ், தமிழக பாஜக துணைத் தலைவர் எம்.ஆர்.காந்தி. வேலூர் இப்ராகிம் உள்ளிட்டோர் குடியுரிமைச் சட்டம் குறித்து விளக்கினார்கள். இதில் சுமார் 45ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணியில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனால் நாகர்கோவிலின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.


முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் மாசி மாத திருச்செந்தூருக்கு காவடி மற்றும் பாதயாத்திரயாக சென்ற உள்ளார்கள். மேலும் நேற்று மார்ச் 1 மண்டைக்காடு கொடை விழா கொடியற்றத்துடன் துவங்கி உள்ளது இருந்த போதிலும் சுமார் 45ஆயிரம் மக்கள் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக நேற்றைய பேரணியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

Leave your comments here...