டெல்லி கலவரம் – ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசைன் மீது போலீசார் வழக்குப்பதிவு.!!

இந்தியா

டெல்லி கலவரம் – ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசைன் மீது போலீசார் வழக்குப்பதிவு.!!

டெல்லி கலவரம் – ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசைன் மீது போலீசார் வழக்குப்பதிவு.!!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டில்லியின் வடகிழக்கு பகுதியில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதில், பல வீடுகள், கடைகள், வாகனங்கள் சூறையாடப்பட்டன. வன்முறையில் போலீஸ் கான்ஸ்டபிள், உளவுத்துறை அதிகாரி உட்பட 35 பேர் பலியாகினர், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த வன்முறைக்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளே காரணம்.கையில் ஆயுதத்துடன் ஆம் ஆத்மி கவுன்சிலர் வன்முறையில் ஈடுபடும் வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது என்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் தாஹிர் உசேன் வீடு ஒரு கலக தொழிற்சாலை என்பதை காட்டும் வீடியோக்கள் உள்ளன.


வன்முறைக்கு தயாராவதற்காக அவரது வீட்டில் துப்பாக்கிகள், ரசாயனங்கள் மற்றும் பிற பொருட்களை பார்த்தோம். ஆனால் இது குறித்து ஆம் ஆத்மி கட்சி மவுனம் சாதிக்கின்றது மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்

இது குறித்து தாஹிர் உசேன் கூறுகையில்:- வன்முறையின் போது மர்ம கும்பல் தனது வீட்டிற்குள் நுழைவது குறித்து போலீசார் மற்றும் ஊடகங்களுக்கு அனைத்து விவரங்களையும் கொடுத்ததாக தாஹிர் கூறியுள்ளார்.


இந்நிலையில், வடகிழக்கு டெல்லியில் உள்ள காஜூரி காஸ் பகுதியில் அமைந்த ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சிலர் தாஹிரின் தொழிற்சாலையை போலீசார் சீல் வைத்து மூடியுள்ளனர்.


டெல்லி ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசைன் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. உளவுப்பிரிவு அதிகாரி அங்கித் சர்மா கொல்லப்பட்டதன் பின்னணியில் தாஹிர் உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Leave your comments here...