மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழாவையொட்டி 200 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு

தமிழகம்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழாவையொட்டி 200 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழாவையொட்டி 200 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு

பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைகாட்டில் உள்ள அருள்மிகு பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் மாசி கொடை விழா வெகு விமர்சியாக கொண்டாடபடுவது வழக்கம்.அந்தவகையில் இந்த ஆண்டிற்கான மாசி கொடை விழா மார்ச் ஒன்றாம் தேதி முதல் துவங்கிறது. இந்த விழா நாட்களில் லட்ச கணக்கான பக்தர்கள் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு தமிழகம் கேரளா உட்பட பல்வேறு பகுதிகளில் தரிசிக்க வருவார்கள். மண்டைக்காடு கோயில் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.இருப்பினும் பக்தர்கள் வருகை இப்போதே அதிகரித்துள்ளது. இதனால் அந்த பகுதி களை கட்டி காணப்படுகிறது. மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் விழாவில் பங்கேற்க கேரளாவில் இருந்து பக்தர்கள் அதிகமாக வருவது வழக்கம்

இந்த விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (நெல்லை) மற்றும் கேரள அரசு போக்குவரத்துக் கழகமும் இணைந்து திருவனந்தபுரத்தில் இருந்து மண்டைக்காட்டுக்கு தலா 16 பேருந்துகள் இயக்க முடிவு செய்து இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.இந்த பஸ்கள் வருகிற 28-ந் தேதி முதல் மார்ச் 10-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. நாகர்கோவில், கன்னியாகுமரி, களியக்காவிளை, மார்த்தாண்டம், குமாரகோவில், தக்கலை, குலசேகரம், திங்கள்நகர், குளச்சல் உள்பட மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் இருந்து 200-க்கும் அதிகமான சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.



மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றார். அவர் கோவிலை சுற்றி பார்வையிட்டு பக்தர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசாருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், கடற்கரை பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினார்.அவருடன் குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு சாய்சரன் தேஜஸ்வி, மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் முத்துராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.

Leave your comments here...