டெல்லி வன்முறையாளர்கள் வெறிச்செயல்: பலியான உளவுத்துறை அதிகாரி அன்கிட் சர்மா- கதறிய தாய்

இந்தியா

டெல்லி வன்முறையாளர்கள் வெறிச்செயல்: பலியான உளவுத்துறை அதிகாரி அன்கிட் சர்மா- கதறிய தாய்

டெல்லி வன்முறையாளர்கள் வெறிச்செயல்: பலியான உளவுத்துறை அதிகாரி அன்கிட் சர்மா- கதறிய தாய்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த மூன்று தினங்களாக டெல்லியில் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.இது வன்முறையாக மாறியது.

இதனால் டெல்லியில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது. 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த வடகிழக்கு டெல்லி பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உளவுத்துறையில் பாதுகாப்பு உதவியாளராக பணியாற்றி வருபவர் அன்கிட் சர்மா பிரப்பிரவரி 24 அன்று பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது சந்த்பக் பாலம் அருகே போராட்டக்காரர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இதில் உயிரிழந்த அவரின் உடல் சாக்கடையில் வீசப்பட்டுள்ளது.


அன்கிட் சர்மாவை காணாததால் அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து விசாரணை நடத்தப்பட்டு, அவரின் உடல் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் தனது மகனை தாக்கியது ஆம்ஆத்மி கட்சி தலைவரின் ஆதரவாளர்கள் என அன்கிட்டின் தந்தை ரவீந்தர் சர்மா குற்றம்சாட்டி உள்ளார்.இவரும் உளவுத்துறையில் பணியாற்றி வருகிறார். இதனால் டெல்லி வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

Leave your comments here...