வீட்டை காலி செய்ய மறுப்பு : உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த பியூஸ் மானுஷ் கைது

தமிழகம்

வீட்டை காலி செய்ய மறுப்பு : உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த பியூஸ் மானுஷ் கைது

வீட்டை காலி செய்ய மறுப்பு : உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த பியூஸ் மானுஷ் கைது

சேலம் மாவட்டம் ஏற்காடு அடிவாரம் அருகே சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மானுஷ் வசித்து வருகிறார். இவர் ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள கொண்டப்ப நாயக்கன் பட்டி என்னும் ஊரில் ஆயிஷா குமாரி என்பவர் வீட்டில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக வசித்துவருகிறார்.

இந்நிலையில் ஆயிஷா குமாரி அளித்த கொலை மிரட்டல் புகாரின் பேரில் சேலத்தில் சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மானுஸ் புதன் மாலை கைது செய்யப்பட்டார்.இதுதொடர்பாக ஆயிஷா குமாரி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள புகாரில் சமீபத்தில் சமூக விரோத காரியங்களால் பியூஷ் ஈடுபடுவதாகவும், எனவே வீட்டைக் காலி செய்யுமாறு கூறிய போது, பியூஷ் மானுஸ் அதற்கு மறுத்து, காலி செய்ய மறுப்பதாகவும், எதிர்த்துக் கேள்வி கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து புதன் மாலை கொண்டப்ப நாயக்கன்பட்டி காவல்துறையினர் பியூஷை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் கைது செய்யட்டார். அவர் மீது கொலை மிரட்டல் விடுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Leave your comments here...