சொல்லி அடிக்கும் மோடி..!அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா இடம் பெற ஆதரவு அளிக்கப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதி..!!

இந்தியாஉலகம்

சொல்லி அடிக்கும் மோடி..!அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா இடம் பெற ஆதரவு அளிக்கப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதி..!!

சொல்லி அடிக்கும் மோடி..!அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா இடம் பெற ஆதரவு அளிக்கப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதி..!!

அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா சேர பிரேசில், நியூசிலாந்து, ஆஸ்திரியா, அயர்லாந்து, துருக்கி ஆகிய 5 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.48 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் (என்.எஸ்.ஜி.) உறுப்பினர் ஆவதற்கு கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.இந்த குழுவில் உள்ள பெரும்பான்மையான நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அண்டை நாடான சீனா, இந்தியாவை இந்த குழுவில் இணைப்பதற்கு நேரடியாகவும்,மறைமுகமாகவும் பல்வேறு முட்டுக்கட்டுகளை போட்டு வருகிறது.இந்த நிலையில், தென்கொரிய தலைநகர் சியோலில் என்.எஸ்.ஜி உறுப்பு நாடுகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியாவை என்.எஸ்.ஜியில் இணைத்துக்கொள்வது பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது இந்தியாவை என்.எஸ்.ஜியில் சேர்த்துக்கொள்ள மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அதேவேளையில், இந்தியாவை இணைப்பதற்கு சீனா மட்டுமல்லாது மேலும் 5 நாடுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.பிரேசில் ,ஆஸ்திரியா, அயர்லாந்து துருக்கி, நியூசிலாந்து ஆகிய நாடுகள் அணு ஆயுத பரவல் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்பதை மேற்கோள் காட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதேவேளையில், பாகிஸ்தானை என்.எஸ்.ஜியில் உறுப்பு நாடாக இணைத்துக்கொள்வது பற்றி விவாதிக்கப்படவில்லை.


இந்த நிலையில், அணு சக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில், இந்தியா உடனடியாக இணைய ஆதரவு அளிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்திய சுற்றுப்பயணத்திற்கு பிறகு இந்தியா அமெரிக்கா இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டது. இந்தக் கூட்டறிக்கையில், ”அணுசக்தி விநியோகக் குழுவில் இந்தியா உடனடியாக இணைய ஆதரவு அளிக்கப்படும் டிரம்ப் மீண்டும் உறுதி அளித்துள்ளார்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- அதிபர் டிரம்பும் பிரதமர் மோடியும் ஐக்கிய நாடுகள் அவை மற்றும் பிற சர்வதேச அமைப்புகளை சீர்திருத்தம் செய்வது மற்றும் வலுப்படுத்துவது தொடர்பாக ஒருங்கிணைந்து பணியாற்றுவது என தீர்மானித்துள்ளனர். அணு சக்தி விநியோக கூட்டமைப்பில் இந்தியா, உடனடியாக இணைய அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்பதை டிரம்ப் மீண்டும் உறுதி செய்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave your comments here...