தம்பிகளை குஷி படுத்த சிவன்-பார்வதி-முருகன் கட்டுக்கதை: காச பணமா அடிச்சு விடும் சீமான்..!

தமிழகம்

தம்பிகளை குஷி படுத்த சிவன்-பார்வதி-முருகன் கட்டுக்கதை: காச பணமா அடிச்சு விடும் சீமான்..!

தம்பிகளை குஷி படுத்த சிவன்-பார்வதி-முருகன் கட்டுக்கதை: காச பணமா அடிச்சு விடும் சீமான்..!

நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் சமீபத்தில் நடந்த தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தில் முதல் ஆளாக போய் கலந்து கொண்டு, உருக்கமாக வேண்டிக் கொண்டு, பரிவட்டம் கட்டி மெய் சிலிர்த்து, சிவனை சேவித்த சீமான், தற்போது சிவனுக்கும், பார்வதிக்கும் எந்த தொடர்பும் இல்லை என பேசி உள்ளார். அத்துடன், இதுவரை முருகக் கடவுள் தனது முப்பாட்டன் என கூறி வந்தவர், இப்போது முருகன், சிவன்-பார்வையின் மகன் என்பதே கட்டுக்கதை என கூறி உள்ளார்.


இது பற்றி அதே கூட்டத்தில் அவர் பேசுகையில்:- கொற்றவை பார்வதியாகிறாள். சிவன் யார்? முருகன் எங்கே? சிவனுக்கு முருகனை மகனாக்கி சினிமா கதையை விட மிகப் பெரிய திரைக்கதை அமைத்துக் கொண்டுள்ளனர். முருகன் காலம் வேறு, சிவன் வேறு. சிவன்-பார்வதியை முருகனுக்கு தாய்-தந்தை என கூறி நம்ப வைத்துள்ளனர்” என்றார்.

கண்ணன், பெண்களின் ஆடையை திருடிச் சென்ற கயவன் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி, சிக்கலில் சிக்கிக் கொண்ட சீமானுக்கு கண்ணன் என்ன நிறம் என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கண்ணன் குறித்து அவர் பேசுகையில், “கண்ணன் நீள நிறமா, கருப்பு நிறமா என இப்போது வரை பலருக்கு குழப்பம் உள்ளது. கண்ணதாசனுக்கே இதில் குழப்பம். ஒரு பாடலில் கருமை நிற கண்ணா என்கிறார், மற்றொரு பாடலில் நீலநிற கண்ணா வாடா என்கிறார். காரை திருடிச் சென்று நிறத்தை மாறுவது போல், கருப்பான கண்ணனை திருடிச் சென்று, நீல நிற வண்ணம் அடித்து விட்டனர். நீல நிறம் என்பது வடக்கில் இருந்து திணிக்கப்பட்டது” என்ற புதிய தகவலை ரிலீஸ் செய்துள்ளார்.

தற்போது இடஒதுக்கீட்டிற்காக யாதவர்கள் என போட்டுக் கொள்பவர்கள், நாம் தமிழர் ஆட்சி காலத்தில் கோன் என்று போட்டால் தான் இடுஒதுக்கீடு வழங்கப்படும் என மாற்றுவோம்” எனவும் மராட்டிய சரபோஜி மன்னர்கள் படையெடுத்து வந்து தமிழர்களை வென்றது போல, மராட்டியரான ரஜினி படம் எடுத்து வந்து ஆட்சியைப் பிடிக்க நினைப்பதாக குற்றஞ்சாட்டினார்.

Leave your comments here...