தமிழ்நாட்டில் இருந்து திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு..!!

இந்தியா

தமிழ்நாட்டில் இருந்து திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு..!!

தமிழ்நாட்டில் இருந்து திருடப்பட்ட  திருமங்கை ஆழ்வார் சிலை இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு..!!

தமிழ்நாட்டில் சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் உள்ள திருமங்கை ஆழ்வார் சிலை, கடந்த 1957-ம் ஆண்டு திருடு போனது. இது, 15-ம் நூற்றாண்டு வெண்கல சிலை ஆகும். அதே போன்ற போலி சிலையை அந்த இடத்தில் வைத்துள்ளனர்.

இந்நிலையில், அந்த சிலை, இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள அஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. ஜே.ஆர்.பெல்மான்ட் என்ற கலெக்டரின் அபூர்வ பொருட்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த இந்த சிலை, கடந்த 1967-ம் ஆண்டு, சூத்பி ஏல மையம் மூலமாக ஏலம் விடப்பட்டுள்ளது. அதை அஷ்மோலியன் அருங்காட்சியகம் ஏலத்தில் எடுத்துள்ளது.

இதற்கிடையே, கடந்த நவம்பர் மாதம், தனியார் ஆராய்ச்சியாளர் ஒருவர், அந்த திருமங்கை ஆழ்வார் சிலை, தமிழ்நாட்டில் இருந்து திருடப்பட்டது என்பதை கண்டுபிடித்து, அருங்காட்சியக நிர்வாகிகளிடம் தெரிவித்தார். உடனே, இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அருங்காட்சியக நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர். கூடுதல் ஆதாரங்கள் இருந்தால் அளிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.



அதன்படி, தமிழ்நாட்டில் இருந்து சிலை தடுப்பு பிரிவு போலீசாரின் அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.அதில், தமிழ்நாட்டு கோவிலில் இருந்து திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலைதான் அது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சிலையை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இந்தியா சார்பில் முறைப்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது.சிலையை ஒப்படைக்க அஷ்மோலியன் அருங்காட்சியகம் விருப்பம் தெரிவித்துள்ளது. இருப்பினும், தங்கள் பிரதிநிதியை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்து, மேலும் ஆய்வு செய்து உறுதிப்படுத்த விரும்புவதாக கூறியுள்ளது.அதை ஏற்றுக்கொண்ட இந்திய அதிகாரிகள், இந்த பணியை விரைவுபடுத்துமாறு வலியுறுத்தி உள்ளனர். இத்தகவலை லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்

Leave your comments here...