சிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது – மத்திய அரசு குற்றச்சாட்டு

இந்தியா

சிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது – மத்திய அரசு குற்றச்சாட்டு

சிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது – மத்திய அரசு குற்றச்சாட்டு

டில்லியில் சிஏஏ போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் கலவரக்காரர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். வன்முறை கும்பல் நடத்திய தாக்குதலில் கோலக்பூரி தலைமை காவலர் ரத்தன்லால் பலியானார். மேலும் 10 போலீசார் உள்பட 30 பேர் காயமுற்றதாகவும் கூறப்படுகிறது.தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். வாகனங்களுக்கு வன்முறை கும்பல் தீ வைத்தது.இதனால் இங்கு பதட்டம் நிலவுகிறது. மேலும் வன்முறை பரவாமல் தடுக்க துணை ராணுவம் அழைக்கப்பட்டுள்ளனர். வன்முறையை கட்டுக்குள் வைக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்கள், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வருகையையொட்டி திட்டமிட்டு நடத்தப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் குற்றம் சாட்டின. இதன் மூலம், சம்பந்தப்பட்டவர்கள் விளம்பரம் பெற திட்டமிட்டு இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. டெல்லி போலீஸ் கமி‌ஷனர் அமுல்யா பட்நாயக், போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து நிலைமையை கண்காணித்து வருகிறார்.



இதற்கிடையே டெல்லி வன்முறை சம்பவங்கள் குறித்து கருத்து வெளியிட்ட மத்திய உள்துறை செயலாளரான அஜய் குமார் பல்லா, “தற்போது மூத்த அதிகாரிகள் களத்தில் உள்ளனர். போதுமான அளவில் பாதுகாப்பு படையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

துப்பாக்கியால் சுட்ட நபர்:-இந்தச் சூழலில், ஜாஃப்ராபாத் பகுதியில் திங்கள்கிழமை காலை வன்முறை வெடித்தது. இப்பகுதியில் சிஏஏவை எதிர்த்துப் போராட்டம் நடத்தியவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இவர்கள், காவல் துறை மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.


அப்போது மர்ம நபர் ஒருவர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டார். எனினும், இதில் யாரும் காயமடையவில்லை. இந்நிலையில், ஜாஃப்ராபாத்தில் தொடங்கிய வன்முறை மௌஜ்பூர், பஜன்புரா, சந்த்பாக் ஆகிய பகுதிகளுக்கும் பரவியது. இப்பகுதிகளில் சிஏஏ எதிர்ப்பு, ஆதரவுப் போராட்டக்காரர்கள் பரஸ்பரம் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்கள் அப்பகுதிகளில் உள்ள கடைகள், வீடுகள், வாகனங்களுக்கு தீவைத்துக் கொளுத்தினர். இதனால், அப்பகுதி புகை மண்டலமாகக் காட்சியளித்தது. இதைத் தொடர்ந்து, தில்லி போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த வன்முறையைத் தொடர்ந்து பிங்க் வழித் தடத்தில் உள்ள ஜாஃப்ராபாத், மௌஜிபூர், பாபர்பூர், கோகுல்புரி, ஜோக்ரி என்கிளேவ், ஷிவ் விஹார் ஆகிய 5 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன.

Leave your comments here...