ஆந்திராவில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக திசா பெயரில் போலீஸ் நிலையம்: முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி..!!

இந்தியா

ஆந்திராவில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக திசா பெயரில் போலீஸ் நிலையம்: முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி..!!

ஆந்திராவில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக திசா பெயரில் போலீஸ் நிலையம்: முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி..!!

கடந்த ஆண்டு ஐதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவரை 4 பேர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பெண்ணிற்கு திசா என பெயர் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில குற்றவாளிகள் 4 பேரும் என் கவுண்டர் செய்யப்பட்டனர்.

பெண்கள் மற்றும் சிறுமிகள் இதுபோன்ற பாலியல் கொடுமைக்கு ஆளாவதை தடுத்து நிறுத்த ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திசா சட்டம் கொண்டு வந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். இதற்காக தனி காவல் நிலையங்கள், தனி நீதிமன்றங்கள் மாநிலம் முழுவதிலும் உள்ள 13 மாவட்டங்களில் ஏற்படுத்தப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரியில் முதல் திசா காவல் நிலையத்தை ஜெகன்மோகன் ரெட்டி திறந்து வைத்தார். இத்துடன் திசா செயலியையும் தொடங்கி வைத்தார்.


பின்னர் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி:- ஆந்திரா முழுவதும் 18 திசா காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு டி.எஸ்.பி. இரண்டு இன்ஸ்பெக்டர்கள், ஐந்து சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்களும் சேர்த்து மொத்தம் 52 பேர் இருப்பார்கள். இந்த சட்டம் குறித்து மாநில மக்களுக்கு விளக்கிக் கூறவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஐ.ஏ.எஸ். அதிகாரி கிருத்திகா சுக்லா, ஐ.பி.எஸ். அதிகாரி தீபிகாவை அரசு பிரத்தியேக அதிகாரிகளாக நியமித்துள்ளது.

ஆந்திர மாநிலம், கொண்டு வந்த திசா சட்டத்தை தமது மாநிலங்களிலும் அமல்படுத்த இருப்பதாக டெல்லி, மராட்டிய மாநிலங்களும் அறிவித்துள்ளன. மேலும் மாநிலங்களில் நடைபெறும் குற்றங்களில் பெரும் பங்கு பெண்கள் மீது நடக்கும் வன்கொடுமைகளே அதிகமாக உள்ளது. பெண்களை காப்பாற்ற, பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேற்ற நமது அரசு முனைப்புடன் செயல்படுகிறது என கூறினார்.!


Leave your comments here...