உலகின் முதல் குண்டு துளைக்காத புல்லட் புரூஃப் ஹெல்மட்டை வடிவமைத்து இந்திய ராணுவ வீரர் அனூப் மிஸ்ரா.!

இந்தியா

இந்திய ராணுவ மேஜர் அனூப் மிஸ்ரா. ராணுவ அதிகாரிகளின் பயன்பாட்டுக்காக, குறைந்த விலையில் மிக பாதுகாப்பான புல்லட் புரூஃப் ஜாக்கெட்டை வடிவமைத்துத் தந்தவரான இவர், தற்போது, புல்லட் புரூஃப் ஹெல்மெட்டை வடிவமைத்துள்ளார்.

இதில் ஏகே47 ரக துப்பாக்கிகளில் இருந்து சீறும் குண்டுகளாக இருந்தாலும், 10 மீட்டர் தொலைவில் இருந்து சுட்டாலும் அதனை இந்த ஹெல்மெட் தடுத்து நிறுத்தும் என கூறப்படுகிறது.

அதேபோல், 400 மீட்டர் தொலைவில் இருக்கும்போதே அது எந்த திசையில் இருந்து வருகிறது என்பதை இந்த ஹெல்மெட் காட்டிக் கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்துவது பாதுகாப்புப் படையினருக்கு எளிதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...