வரலாற்று சிறப்பு பெற்ற அருள்மிகு நாகர்கோவில் நாகராஜா கோயிலில் தேரோட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 2,000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு பெற்ற அருள் மிகு நாகராஜா கோவிலில் தை பெருந்திரு விழாவின் முக்கிய நிகழ்சியான தேர் திருவிழா இன்று நடைபெற்றது. ஆண்டுதோறும் 10 நாட்கள் தை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தை திருவிழா கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவையொட்டி தினமும் காலை மற்றும் இரவில் சுவாமி வாகனங்களில் வீதி உலா காட்சி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தேரோட்டத்தையொட்டி இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், 9ம் திருவிழாவான இன்று அலங்கரிக்கப்பட்ட தேரில் அனந்தகிருஷ்ணர், பாமா, ருக்மணியுடன் எழுந்தருளினர். பின்னர் சிறப்பு தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. பின்னர் தேரோட்டத்தை ஆவின் சேர்மனும், கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான அசோகன் உள்ளிட்டோர் வடம்பிடித்து இழுத்து தொடக்கி வைத்தனர். உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார், அறநிலைத்துறை தலைவர் சிவகுற்றாலம், முன்னாள் நகர பாஜ தலைவர் ராஜன், அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, ஸ்ரீகாரியம் ஆறுமுகதரன், கண்காணிப்பாளர் தங்கம் உட்பட பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர். முன்னதாக தேரோட்டத்தையொட்டி, காலை 10 மணி முதல் அன்னதானமும் நடைபெற்றது. இதிலும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதில், குமரி மாவட்டம் மற்றும் கேரள மாநில பக்தா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.
Leave your comments here...