ரூ.25-க்கு உணவு வழங்க 1000 குடும்பஸ்ரீ உணவகங்கள் அமைக்க திட்டமிடும் கேரள அரசு

சமூக நலன்

ரூ.25-க்கு உணவு வழங்க 1000 குடும்பஸ்ரீ உணவகங்கள் அமைக்க திட்டமிடும் கேரள அரசு

ரூ.25-க்கு உணவு வழங்க 1000 குடும்பஸ்ரீ உணவகங்கள் அமைக்க திட்டமிடும் கேரள அரசு

கேரளா முழுவதும் மானிய விலையில் 25 ரூபாய்க்கு கேரள உணவுகளை விற்க 1,000 குடும்பஸ்ரீ ஓட்டல்கள் அமைக்கப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

குடும்பஸ்ரீ எனும் பெயரில் கேரள வறுமை ஒழிப்புத் திட்டம் கடந்த 1998ம் ஆண்டில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ் பல்வேறு பணிகளை கேரள அரசு செய்து வரும்நிலையில், கேரள சட்டப்பேரவையில் நேற்று அந்த மாநில நிதியமைச்சர் டி.எம். தாமஸ் ஐசக் தாக்கல் செய்த பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் 25 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு உணவுகளை விற்க 1,000 குடும்பஸ்ரீ ஓட்டல்கள் தொடங்க்பட்டௌம்  எனவும், குடும்பஸ்ரீ திட்டத்தின்கீழ் குடைகள், தேங்காய் பொருள்கள், மசாலா பொருள்கள் உள்ளிட்டவை பொதுப்பெயரில் உற்பத்தி செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave your comments here...