பாஜகவில் இணைந்தார் எம்பி சசிகலா புஷ்பா – தமிழகத்தில் மலர்வதை யாராலும் தடுக்க முடியாது என பேட்டி..!

அரசியல்

பாஜகவில் இணைந்தார் எம்பி சசிகலா புஷ்பா – தமிழகத்தில் மலர்வதை யாராலும் தடுக்க முடியாது என பேட்டி..!

பாஜகவில் இணைந்தார் எம்பி சசிகலா புஷ்பா – தமிழகத்தில் மலர்வதை யாராலும் தடுக்க முடியாது என பேட்டி..!

கடந்த 2011ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை தூத்துக்குடி மேயராக பதவி வகித்தவர்.  அதன்பின் கடந்த 2014ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற மேலவை எம்.பி.யாக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவுடன் டெல்லி விமான நிலையத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.  இதனால் அவர் அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டார் என கூறப்பட்டது.  எனினும், அதற்கான முறையான நோட்டீஸ் அனுப்பப்படவில்லை என சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது.  இதனால் அவர் கட்சியில் இருந்து வெளியேற்றப்படவில்லை என முடிவானது.


இந்நிலையில், சசிகலா புஷ்பா எம்.பி. டெல்லியில் பா.ஜக.வின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் முரளிதரராவ் மற்றும் முன்னாள் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார்.ஏற்கனவே அதிமுகவில் இருந்து விலகி நாயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்தார். அதைத்தொடர்ந்து சசிகலா புஷ்பாவும் இப்போது பாஜகவில் இணைந்துள்ளார். சமீப காலமாக சினிமா பிரபலங்களும், விளையாட்டு பிரபலங்களும் பாஜகவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பின்னர் பேசிய சசிகலா புஷ்பா:- இனி தமிழகத்தில் பிஜேபியின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் பாஜக அரசு தமிழகத்தில் மலர்வதை யாராலும் தடுக்க முடியாது என கூறினார்

Leave your comments here...