உபியில் பயங்கரம்: நடைபயிற்சி சென்ற விஷ்வ இந்து மகாசபா தலைவர் சுட்டுக் கொலை..!

இந்தியா

உபியில் பயங்கரம்: நடைபயிற்சி சென்ற விஷ்வ இந்து மகாசபா தலைவர் சுட்டுக் கொலை..!

உபியில் பயங்கரம்: நடைபயிற்சி சென்ற விஷ்வ இந்து மகாசபா தலைவர் சுட்டுக் கொலை..!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் விஷ்வ இந்து மகாசபா அமைப்பின் மாநில தலைவர் ரஞ்சித் பச்சன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

லக்னோ ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் இன்று காலை தனது சகோதரருடன் அவர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் பலமுறை சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

இதில் பலத்த காயமடைந்த ரஞ்சித் பச்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டில் அவரின் சகோதரரும் காயமடைந்தார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் யாரென தெரியவில்லை.

இதுகுறித்து லக்னோ போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விஷ்வ இந்து மகா சபாவில் சேருவதற்கு முன்பு, சமாஜ்வாதி கட்சியில் இருந்த ரஞ்சித் பச்சன், முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர்.

Leave your comments here...