11-வது இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி

ஆன்மிகம்கட்டுரைகள்

11-வது இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி

11-வது இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி

இந்திய அளவில் இந்துமத மடங்கள்,இந்து மத அமைப்புகள் RSS ன் கிளை அமைப்புகள் இணைந்து பெரிய மாநிலங்களில் நடத்தப்படும் ஒரு அருமையான நிகழ்ச்சி.

இதற்கு ஆடிட்டர் குருமூர்த்தி அவர்கள் தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளாக இருந்து சிறப்பாக நடத்தி வருகிறார். 2009ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது தற்பொழுது 11வருடங்களாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியானது சென்னையில் பத்து வருடமாக ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது . இந்த கண்காட்சியில் இஸ்கான்,ஈசா அமிர்தானந்தா மடம், இராமகிருஷ்ணமடம், காஞ்சி மடம் போன்ற ஹிந்து மத மடாலாயங்கள், ஆசிரமங்கள், ஆதினங்கள் போன்றவற்றின் சார்பாக அரங்குகள் அமைக்கபட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.எண்ணற்ற திருக்கோவில்களின் சார்பாக அரங்குகள் கோவில்கள் மாதிரி வடிவங்கள் மற்றும் மூலவர் மாதிரி வடிவங்கள் போன்றவை சிறப்பாக அமைக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்படும். திருப்பதி போன்ற வெளி மாநிலத்தில் புகழ்பெற்ற கோவில்களின் மாதிரி கூட அமைக்கப்பட்டிருக்கும்.



இதுபோக பல தனியார் அமைப்புகள் சேவை மற்றும் தொண்டு நிறுவங்களின் ஸ்டால்கள், அமைக்கப்பட்டிருக்கும் . பாரம்பரிய உணவு வகைகளை வைத்து சில ஸ்டால்கள் அமைக்கபட்டு இருக்கும்.மேலும் நீராபானம் பதனி போன்ற இயற்கை பானங்களும் சுவைக்க கிடைக்கும்.

இது போல சமுதாய சார்ந்த அரங்குகள் அதிகபடியாக அமைக்கப்பட்டிருக்கும். சமுதாயங்களின் வரலாறு, பெயர்காரணம், அந்த மக்கள் வாழுகின்ற பகுதிகள்,அவர்களின் தொழில்கள், அவர் அவர் சமுதாயங்களின் கலாசார பண்பாடுகளை பிரபலிக்கும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.


இந்து ஆன்மீக தொடர்புடைய புத்தக ஸ்டால்களும் அதிக அளவில் அமைக்கப்பட்டு அரிய பல புத்தகங்கள் விற்பனைக்கு கிடைக்கும். சுதந்திர போராட்ட வீரர்கள் தொடர்பான ஒலி ஒளி அமைப்பு காட்சிகள் சிறப்பாக அமைக்கபட்டிருக்கும். இது அனைத்தும் போக ஏழு நாள்களும் பல விதமாக பண்பாட்டு கலாசார நிகழ்ச்சிகள் அரங்கத்தின்உள் சிறப்பாக நடைபெறும். ஸ்டால் விட்டு வெளியே வருகையில் ஏராளமான கடைகள் அமைக்கபட்டு பல பொருள்கள் விற்பனைக்கு இருக்கும். மிக பிரம்மாண்டமாக நடத்தப்படும் நிகழ்ச்சி இன்னும் பல மக்கள் அறியபடாமலே இருக்கிறது. அனைத்து இந்து மக்களும் நிச்சயமாக இந்த நிகழ்ச்சியை கண்டுகழிக்க வேண்டும். வாரஇறுதி விடுமுறை தினத்தில் ஒரு நாளாவது சென்று விட்டு வாருங்கள்.


சென்னைவாழ் மக்கள் தயவுசெய்து தவற விட்டு விடாதிர்கள். அனைவரும் கண்டிப்பாக சென்று பார்க்கும் போது  ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும் குறிப்பாக குழந்தைகளை அழைத்து செல்லுங்கள். குறிப்பாக குழந்தைகளை அழைத்து செல்வதினால் அவர்கள் நமது கலாசாரத்தினையும் பண்பாட்டினையும் பற்றி அதிகமாக அறிய முடியும்.

28-01-2020ல் தொடங்கிய இந்த கண்காட்சி பெண்மையை போற்றுவோம் என்ற தலைப்பில் 03-02-2020 வரை நடைபெற இருக்கிறது. இந்த கண்காட்சியை மாதா அமிர்தானந்த மயி தொடங்கி வைக்கிறார். கண்காட்சியின் முன்னோட்டமாக ஆடல், பாடல் விளையாட்டு போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்த நிகழ்ச்சிக்கு சோனால் மன்சிங் எம்.பி. முன்னிலை வகித்தார். பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் நடனப்பள்ளிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று ஒருசேர நாட்டியம் ஆடினர். நாட்டியத்தை நடனக்கலைஞரும், கல்வியாளரும் நிருத்யோதயா நாட்டியப்பள்ளியின் நிறுவனருமான பத்மா சுப்ரமணியம் மேடையில் இருந்து நாட்டியத்தை தொடங்கிவைத்தார்.


இந்து மத அமைப்புகளின் முக்கிய பெரியவர்கள் பெரிய கட்சி நிர்வாகிகள்,சமுதாய பெரியோர்கள் பத்திரிக்கை நிர்வாகிகள்,ஆகியோர்கள் இந்த நிகழ்ச்சியை பார்வையிட வருவார்கள்..மற்றும் இலட்சகணக்கில் பொதுமக்களும் பார்வையிட்டு செல்வார்கள். காலை ஒன்பது மணி முதல் இரவு ஒன்பது மணி வரை இந்த கண்காட்சியை கண்டு கழிக்கலாம்.

Written By

Gokul Psv
social Activist

 

Leave your comments here...