குடியுரிமை திருத்த சட்டம்: போராட்டத்தை தூண்ட இஸ்லாமிய அமைப்புகளின் வங்கி கணக்கில் 120 கோடி பணம் : அமலாக்கத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

இந்தியா

குடியுரிமை திருத்த சட்டம்: போராட்டத்தை தூண்ட இஸ்லாமிய அமைப்புகளின் வங்கி கணக்கில் 120 கோடி பணம் : அமலாக்கத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

குடியுரிமை திருத்த சட்டம்: போராட்டத்தை தூண்ட இஸ்லாமிய அமைப்புகளின் வங்கி கணக்கில் 120 கோடி பணம் : அமலாக்கத்துறை  வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மாணவர் சங்கத்தின் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மேலும் குடியுரிமை திருத்த சட்டம் பற்றி, எதிர்க்கட்சிகள், பொய் பிரசாரம் செய்வதாக, பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இந்த சட்டம் தொடர்பான சந்தேகங்களை போக்கி, மக்களிடம் விளக்க, நாடு முழுவதும், 10 நாட்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட, பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டது.இந்த பிரசாரத்தின் ஒரு பகுதியாக, வீடு வீடாக சென்று, மக்களிடம், குடியுரிமை திருத்த சட்டம் பற்றி விளக்கம் அளித்து வருகிறார்கள்.


இந்நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்களை தூண்டி விடுவதற்காக கேரளாவை சேர்ந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் சில தனிநபர் வங்கி கணக்குகளில் 120 கோடி ரூபாய்  பணம் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெரும் போராட்டங்கள் நடைபெற்ற கடந்த டிசம்பர் (2019) 4-ம் தேதி முதல் ஜனவரி (2020) 6-ம் தேதி வரையிலான கால கட்டத்தில் இந்த பணப்பரிவர்த்தனை நடத்திருப்பதால் சந்தேசகம் மேலும் வலுப்பெற்றுள்ளது.

இந்த காலக்கட்டத்தில் மொத்தம் 1 கோடியை 4 லட்சம் ரூபாய் 73 வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு 2000 ரூபாய் முதல் 5000 வரை தனி நபர்களின் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டதை முதற்கட்ட விசாரணையில் அமலாக்கத்துறையினர் கண்டுப்பிடித்துள்ளனர். இந்த பணப்பரிவர்த்தனை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Leave your comments here...