ஹிந்து ஆன்மிக கண்காட்சி; இன்று மாதா அமிர்தானந்த மயி தொடங்கி வைக்கிறார் – ஒரே நேரத்தில் 2 ஆயிரம் மாணவிகள் ஒன்று சேர்ந்து பாரத நாட்டியம் ஆடிய காட்சி..!

தமிழகம்

ஹிந்து ஆன்மிக கண்காட்சி; இன்று மாதா அமிர்தானந்த மயி தொடங்கி வைக்கிறார் – ஒரே நேரத்தில் 2 ஆயிரம் மாணவிகள் ஒன்று சேர்ந்து பாரத நாட்டியம் ஆடிய காட்சி..!

ஹிந்து ஆன்மிக கண்காட்சி; இன்று மாதா அமிர்தானந்த மயி தொடங்கி வைக்கிறார் – ஒரே நேரத்தில் 2 ஆயிரம் மாணவிகள் ஒன்று சேர்ந்து பாரத நாட்டியம் ஆடிய காட்சி..!

சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் 11-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இந்த கண்காட்சியை மாதா அமிர்தானந்த மயி தொடங்கி வைக்கிறார். கண்காட்சியின் முன்னோட்டமாக ஆடல், பாடல் விளையாட்டு போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பரதமுனி சம்ஸ்கார நடனம் என்ற தலைப்பில் மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் பரதநாட்டிய நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. ஒரே நிகழ்வில், 2 ஆயிரம் மாணவிகள் ஒன்று சேர்ந்து ஆடிய காட்சி பார்வையாளர்கள் மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தியது.


இந்த நிகழ்ச்சிக்கு சோனால் மன்சிங் எம்.பி. முன்னிலை வகித்தார். பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் நடனப்பள்ளிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று ஒருசேர நாட்டியம் ஆடினர். நாட்டியத்தை நடனக்கலைஞரும், கல்வியாளரும் நிருத்யோதயா நாட்டியப்பள்ளியின் நிறுவனருமான பத்மா சுப்ரமணியம் மேடையில் இருந்து நாட்டியத்தை தொடங்கிவைத்தார்.

இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் அடிப்படை கருத்துகளை வலியுறுத்தி மாணவிகள் நடனமாடினர்.ஜீவராசிகளை பேணுதல் என்ற கருத்தில் யானையை குறியீடாகக் கொண்டு, சங்கர் மகாதேவன் எழுதிய சமஸ்கிருத பாடல், பாரதமாதா பற்றிய பாடல், மாதா பிதா குரு தெய்வத்தைப் போற்றும் மலையாளப்பாடல், சுற்றுச்சூழலை பராமரித்தலை வலியுறுத்தும் கன்னடப்பாடல், துளசியின் சிறப்பை சொல்லும் தமிழ்ப்பாடல், பசுவின் பெருமையைப் போற்றும் தெலுங்கு பாடல், பூமாதேவிப் பற்றிய ஒடிசா பாடல், கங்கையைப் பற்றிய சமஸ்கிருதப் பாடல், நாக வந்தனத்தை வலியுறுத்தும் தெலுங்கு பாடல், வைஷ்ணவ ஜனதோ என்று தொடங்கும் குஜராத்தி பாடல், ராணுவ வீரர்களின் வீரத்தை போற்றும் பஞ்சாபி பாடல் மற்றும் தேசப்பற்றை ஊட்டும் பாடல் என பல மொழிகளில் இயற்றப்பட்ட 15 பாடல்களுக்கு மாணவிகள் நடனமாடினர். நாட்டுபற்று, வீரம், ஜீவராசிகள் மீது காட்டும் பரிவு என பாடல் வரிகளுக்கேற்ப மாணவிகளின் அபிநயமும், முக பாவங்களும் பார்வையாளர்களை மெய் சிலிர்க்க செய்தது.


Leave your comments here...