ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை, வீட்டு சுவர் ஏறி குதித்து கைது செய்தவருக்கு ஜனாதிபதி விருது

இந்தியா

குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான ஜனாதிபதியின் காவலர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த ஆண்டு சிதம்பரம் வீட்டின் 6 அடி உயர சுற்று சுவர் மீது ஏறி உள்ளே குதித்து, அவரை கைது செய்த டிஎஸ்பி ராமசாமி உள்ளிட்ட 28 சிபிஐ அதிகாரிகளுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.மிக நிதானமான, அதே சமயம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் அதிகாரி என பெயர் பெற்றவர் ராமசாமி.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரத்தின் மகன் கார்த்தியையும் கைது செய்தது இவர் தான். இந்த குழுவில் இடம்பெற்ற மற்றொரு உயர் அதிகாரி தீரேந்திர சுக்லா. இந்த குழுவிற்கு தலைமையாக இருந்த இவர், யுஏஇ., யில் இருந்து வந்த முதல் இந்திய அதிகாரி ஆவார். இவர் பல சவாலான, சிக்கலான குற்றங்களை திறம்பட கண்டுபிடித்தவர். மற்றொருவரான சிறப்பு குற்றப்பிரிவு எஸ்.பி.,நிர்பய் குமார், லாலு பிரசாத்தின் ரயில்வே ஊழல் வழக்கு விசாரணையில் முக்கிய பங்கு வகித்தவர்.

Leave your comments here...