குடியரசு தின விழா; நேபாளத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்சுகளை பரிசாக வழங்கியது இந்தியா..!

இந்தியா

குடியரசு தின விழா; நேபாளத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்சுகளை பரிசாக வழங்கியது இந்தியா..!

குடியரசு தின விழா;  நேபாளத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்சுகளை பரிசாக வழங்கியது இந்தியா..!

இந்தியாவின் 71வது குடியரசு தின விழா காத்மண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தில் நடந்தது. இந்திய தூதர் அஜய்குமார், தேசிய கொடி ஏற்றி வைத்தார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில், ஆம்புலன்சுகளையும், பஸ்களையும் பரிசாக, இந்திய அரசு சார்பில் வழங்கினார். நேபாளத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு, ஏற்கனவே உறுதியளித்தபடி, இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது.

நேபாளத்தின் பல மாகாணங்களில் உள்ள, கல்வி நிறுவனங்கள் மற்றும் 51 நூலகங்களுக்கும் புத்தகங்கள், இந்திய தூதரகம் சார்பில் வழங்கப்பட்டது. மேலும், உயர்நீத்த ராணுவ வீரர்களின் மனைவிகள் மற்றும் உறவினர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகைகளையும் இந்திய தூதர் வழங்கினார்.

குடியரசு தினத்தில், நேபாளத்தில் வசிக்கும் இந்தியர்கள், தூதரக ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.ஏற்கனவே, நேபாளத்தில் 77 மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகள் , கல்வி நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு, இந்திய அரசு சார்பில், 782 ஆ்மபுலன்சுகள் மற்றும் 154 பஸ்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன.

Leave your comments here...