நாட்டின் வளர்ந்து வரும் மக்கள்தொகையை கட்டுப்படுத்து ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

இந்தியா

நாட்டின் வளர்ந்து வரும் மக்கள்தொகையை கட்டுப்படுத்து ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

நாட்டின் வளர்ந்து வரும் மக்கள்தொகையை கட்டுப்படுத்து ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

குடியுரிமை சட்ட திருத்த மசோதா 2019 நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளிலும் வெற்றிகரமான தாக்கல் செய்யப்பட்டு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கிவிட்டதால், இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்டம் காரணமாக இந்தியாவில் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், ஜைனர், கிறிஸ்தவர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் மட்டுமே இதன் மூலம் குடியுரிமை பெற முடியும். அதேபோல் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள் மட்டுமே இங்கு குடியுரிமை பெற முடியும். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா மற்றும் மேகாலயாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைப்போல பாஜக சார்பில் குடியுரிமை சட்டத்தை குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பேரணி நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மொராதாபாத் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில்  பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்: –  நாட்டின் வளர்ந்து வரும் மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதற்கான ஒரு சட்டத்தை கொண்டு வருவது அரசாங்கத்தின் பொறுப்பாக இருந்தாலும், இது காலத்தின் தேவை என்று நாங்கள் உணர்கிறோம்.நாட்டில் அதிகரித்து வரும் மக்கள்தொகை நெருக்கடியைக் கட்டுப்படுத்த ஒரு புதிய சட்டம் வேண்டும் என வலியுறுத்திய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், 2 குழந்தைகள் திட்டத்தையே நாங்கள் ஆதரிக்கிறோம். இது தொடர்பாக மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இந்தச் சட்டம் எந்தவொரு குறிப்பிட்ட மதத்துடனும் எந்த தொடர்பையும் கொண்டிருக்காது,  அனைவருக்கும் பொருந்தும். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்ற வேண்டும். இந்தியா ஒரு வளரும் நாடு. இங்கு மக்கள் தொகை வளர்ச்சியின் கட்டுப்பாடற்ற  தன்மை நாட்டின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதல்ல என கூறினார்.

மேலும், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் ஒரு தன்னம்பிக்கையான சூழல் காணப்பட்டது. அதைத் தொடர்ந்து குடியுரிமைத் திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிராகவும் போராட்டங்கள் நடந்தன. இந்த சட்டத்தின் யதார்த்தத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை. அயோத்தி பிரச்னையில் ராமர் கோயில் அறக்கட்டளை உருவாகும் வரை மட்டுமே ஆர்.எஸ்.எஸ். பங்கு இருந்தது என்றும், அறக்கட்டளை உருவானதும் கோயில் தொடர்பான விஷயங்களிலிருந்து வெளியேறிவிடுவோம் என்றும் மோகன் பாகவத் தெளிவுபடுத்தினார்.

Leave your comments here...