குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் சென்னையில் பிரமாண்ட பேரணி..!

தமிழகம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் சென்னையில் பிரமாண்ட பேரணி..!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் சென்னையில் பிரமாண்ட பேரணி..!

குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மாணவர் சங்கத்தின் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மேலும் குடியுரிமை திருத்த சட்டம் பற்றி, எதிர்க்கட்சிகள், பொய் பிரசாரம் செய்வதாக, பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இந்த சட்டம் தொடர்பான சந்தேகங்களை போக்கி, மக்களிடம் விளக்க, நாடு முழுவதும், 10 நாட்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட, பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டது.இந்த பிரசாரத்தின் ஒரு பகுதியாக, வீடு வீடாக சென்று, மக்களிடம், குடியுரிமை திருத்த சட்டம் பற்றி விளக்கம் அளிக்கவும், முடிவு செய்யப்பட்டது.

 

சென்னையில் நடைபெற்ற பேரணி

இதனை முன்னிட்டு கடந்த ஞாயிறு அன்று பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா டில்லியில் லஜ்பத் நகரில் துவக்கி வைத்தார்.  ஒவ்வொரு வீடாக சென்று குடியுரிமை சட்டம் குறித்த பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதுபோல் ஒவ்வோரு மாநிலத்திலும் மாநில பாஜக தலைவர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள்  விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிா்கட்சிகள் அந்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.இந்த நிலையில், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாகவும் பேரணிகள் மற்றும் பரப்புரைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் சென்னையில் தமிழக பாஜக சார்பில் பேரணி நடந்தது. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் டாக்டர் தி. தேவநாதன் யாதவ், கே.டி.ராகவன், வேலூர் இப்ராஹிம் , உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில், இந்த பேரணி நடைபெற்றது.!

Leave your comments here...